FAST TAG NEW RULES
'பாஸ்டேக்' புதிய விதிகள்: இன்று முதல் அமல்
நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கான ‘பாஸ்டேக்' நடைமுறையில் புதிய விதிகள் இன்று முதல் அமல்.
புதிய விதிகளின் படி, சுங்கச்சாவடியைக் கடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ‘பாஸ்டேக்' செயலற்ற நிலையில் இருந்தால் அல்லது பேலன்ஸ் குறைவாக இருந்தால் சுங்கச்சாவடியில் செலுத்திய கட்டணம் நிராகரிக்கப்படும்.
சுங்கச்சாவடியைக் கடந்து சென்ற பின் 10 நிமிடங்களுக்குள் பாஸ்டேக் செயலிழந்தால் அதாவது 'பிளாக்லிஸ்ட்' செய்யப்பட்டால் பரிவர்த்தனை நிராகரிக்கப்படும்.
அவ்வாறு நடந்தால், சுங்கக் கட்டணத்தில் 2 மடங்கு தொகை அபராதமாக வசூலிக்கப்படும்.
வாகன ஓட்டிகள் பயணம் செய்யும் முன் பாஸ்டேக் பிளாக்லிஸ்ட் செய்யப்படாமல் இருப்பதையும், போதுமான பேலன்ஸ் இருப்பதை உறுதிசெய்து கொள்வது அவசியம்.
Comments
Post a Comment