HALF YEARLY EXAMS 2024
அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு.. டிசம்பர் 16ம் தேதி ஆரம்பம்.. எத்தனை நாட்கள் விடுமுறை
தமிழ்நாட்டில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்பட தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் டிசம்பர் 16ம் தேதி தொடங்கி டிசம்பர் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது. இது தொடர்பான அறிவிப்பினை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. டிசம்பர் 24 முதல் 2025 ஜனவரி 1ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்றும், ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த (2024-25ம் ஆண்டு) கல்வியாண்டிற்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 16 துவங்கும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதன்படி அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 16 துவங்கி 23ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 24ம் தேதி முதல் 2025 ஜனவரி 1ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்படுவதாகவும், ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும், அப்போது மூன்றாம் பருவம் தொடங்கும் என்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரையாண்டு தேர்வு முடிந்து, விடுமுறை டிசம்பர் 24 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில், ஜனவரி 1 ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு வரை விடுமுறை விடப்படுவதால் கிறிஸ்துமஸ் விடுமுறையையும் சேர்த்து 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை கிடைக்கும்.
Comments
Post a Comment