CYCLONE
வங்கக் கடலில் அக். 23 ஆம் தேதி புதிய புயல் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Image : File image / pintrest app
எனினும் இதனால் தமிழகத்திற்கு பெரியளவில் மழை இருக்காது. இது தொடர்பால இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:
வடக்கு அந்தமான் கடற்பகுதியில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இதன் தாக்கத்தால், அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு மத்திய வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அக். 22 ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அக். 23-ஆம் தேதி கிழக்கு மத்திய வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா-மேற்கு வங்கம் இடையே அக். 24 ஆம் தேதி காலை கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகவுள்ள புயலுக்கு கத்தார் நாடு பரிந்துரைத்த 'டானா' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
> •நன்றி : செய்திக்கதிர்
Comments
Post a Comment