முன்பதிவு டிக்கெட்டை வேறு தேதிக்கு மாற்ற ஐ.ஆர்.சி.டி.சி., தளத்தில் வசதி? Source : The seithikathir இந்திய ரயில்வேயில் தினமும் இயக்கப்படும், 13,000க்கும் மேற்பட்ட ரயில்களில், சராசரியாக, 2.50 கோடி பேர் பயணிக்கின்றனர். மக்களிடம் தற்போது இணையதள வசதியுடன், மொபைல்போன் பயன்பாடும் அதிகரித்துள்ள தால், 84 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் தான் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். பஸ், விமான டிக்கெட், உணவு ஆர்டர் செய்வது, வீல் சேர், பயணியர் காத்திருப்பு அறை, பேட்டரி வாகனம் முன்பதிவு உட்பட பல்வேறு கூடுதல் வசதியுடன், இந்த இணையதளம் இயங்கி வருகிறது. ஆனால், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் முன்பதிவு செய்த டிக்கெட்டை, வேறொரு தேதிக்கு மாற்றும் வசதி இல்லை. அதனால், டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக கட்டணமும் பிடித்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து பயணியர் சிலர் கூறியதாவது: பயணியரின் தேவைக்கு ஏற்ப, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. தவிர்க்க முடியாத சூழலில், பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டால், டிக்கெட்டை ரத்து செய்து