WAYANAD LANDSLIDE
வயநாடு நிலச்சரிவு- உயிரிழப்பு எண்ணிக்கை 357 ஆக உயர்வு.
கேரளா: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை 357 பேர் உயிரிழப்பு.
357 பேரின் சடலங்கள் இதுவரை மீட்பு; 200 பேரை காணவில்லை என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.
நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட 200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதி.
நிலச்சரிவில் 1,208 வீடுகள் அழிந்தது
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 350-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் தரைமட்ட மாகிவிட்டன.
காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ராட்சத பாறைகள் மற்றும் பெரிய மரங்கள் கட்டிடங்களை நொறுக்கி விட்டன. அவற்றை பெரும்பாடுபட்டு ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மீட்பு குழுவினர் அகற்றி தேடுதல் பணியில் ஈடுபடுகின்றனர்.
நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்த இடத்தில் ஒருசில கட்டிடங்கள் மட்டுமே இருக்கின்றன. அவையும் பலத்த சேதமடைந்த நிலையில் தான் உள்ளன. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 1,208 வீடுகள் முற்றிலுமாக இடிந்து அழிந்துவிட்டது.
முண்டக்கை பகுதியில் 540 வீடுகளும், சூரல்மலை பகுதியில் 600 வீடுகளும், அட்டமலை பகுதியில் 68 வீடுகளும் முற்றிலுமாக இடிந்துவிட்டன.
மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ அதிகாரிகளே, இப்படியொரு பேரழிவை பார்த்ததில்லை என்று கூறியிருக்கின்றனர். அந்த அளவுக்கு நிலச்சரிவால் மிகப்பெரிய அழிவை வயநாடு சந்தித்திருக்கிறது.
• நன்றி : செய்திக்கதிர்
Comments
Post a Comment