EMPLOYMENT NEWS JOBS AT CISF 2024 சி.ஐ.எஸ்.எப்., படையில் சேரணுமா; 1130 பேருக்கு அருமையான வாய்ப்பு: 12ம் வகுப்பு பாஸ் ஆனாலே போதும்! மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சி.ஐ.எஸ்.எப்) காலியாக உள்ள 1130 கான்ஸ்டபிள் ( தீயணைப்பு) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில் மட்டும் 39 காலிப்பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30. சி.ஐ.எஸ்.எப்., என்று அழைக்கப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 1130 கான்ஸ்டபிள் (தீயணைப்பு) பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்வெளி ஆய்வு மையம், துறைமுகம், ஏர்போர்ட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை பாதுகாப்பு பணியில் அமர்த்துவது வழக்கம். தற்போது, மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 1130 கான்ஸ்டபிள் (தீயணைப்பு) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், பொதுப் பிரிவினருக்கு 466 இடங்களும், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (EWS) 114 இடங்களும், எஸ் சி பிரிவினருக்கு 161 இடங்களும், எஸ் டி பிரிவினருக்கு 161 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. கல்வித் தகுதி என்ன? 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்...