EDUCATION POLICY
தமிழகத்திற்கான மாநில கல்விக் கொள்கை அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான, 14 பேர் கொண்ட குழு முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. 3,5,8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வேண்டாம் என அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்வி கொள்கையை ஏற்க மறுத்து, மாநில கல்வி கொள்கையை உருவாக்க கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தமிழில் 800 பக்கங்களிலும், ஆங்கிலத்தில் 500 பக்கங்களிலும் அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இருமொழிக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வர வேண்டும். நீட் தேர்வு இருக்கக்கூடாது. 3,5,8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வுகள் இருக்கக் கூடாது. கல்லூரிகளில் சேர 12ம் வகுப்பு மதிப்பெண் மட்டும் போதாது. 11ம் வகுப்பு மதிப்பெண்களையும் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்
Comments
Post a Comment