REPORT
பள்ளி, கல்லூரிகளில் சாதிய வன்முறைகளை தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குழு தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளது...
அரசுப் பள்ளிகளின் பெயர்களில் ஆதிதிராவிடர் நலத்துறை உள்பட எந்த சாதிய அடையாளங்களும் இருக்கக் கூடாது.
தனியார் பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும்.
சாதி அடையாளங்கள் இருக்கக் கூடாது என்ற உறுதிமொழி பெற்ற பிறகே, புதிய பள்ளி தொடங்க அனுமதி அளிக்க வேண்டும்.
குறிப்பிட்ட சாதி ஆதிக்கமாக உள்ள பகுதிகளில் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களை தலைமை ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது.
ஆசிரியர்களை தேர்வு செய்யும்போது சமூக நீதி சார்ந்த அவர்களின் நிலைப்பாட்டை கண்டறிய வேண்டும்.
கைகளில் வண்ணக்கயிறுகள், நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்.
மாணவர்களின் வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் சாதி பெயர் இடம்பெறக் கூடாது.
மாணவர்களின் சாதி விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டும்-ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குழு...
நன்றி : செய்திகதிர்
Comments
Post a Comment