WEATHER TODAY
தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட்
தமிழகத்திற்கு மே 19, 20, 21 ஆகிய 3 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்.
18, 22 ஆகிய 2 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்- இந்திய வானிலை ஆய்வு மையம்.
மே 22ல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு:
தென்மேற்கு வங்கக் கடலில் வரும் 22ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு.
வரும் 24ல் வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும்-இந்திய வானிலை ஆய்வு மையம்.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்.
கேரளாவில் 20ம் தேதியில் இருந்து 22ம் தேதி வரை அதிக கனமழை பதிவாக வாய்ப்பிருப்பதால் சிவப்பு நிற எச்சரிக்கை.
தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், நிக்கோபார் தீவுகளில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்.
Video : Malai murasu / YouTube
Comments
Post a Comment