SPECIAL TRAIN
நெல்லை - சென்னை சிறப்பு ரயில் ஜூன் மாதம் வரை நீடிப்பு.
நெல்லை - சென்னை, நாகா்கோவில் - சென்னை கோடை கால வாராந்திர சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
நெல்லையிலிருந்து சென்னை எழும்பூா் வரை இயக்கப்படும் கோடை கால வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் 6 முதல் ஜூன் 27 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் வாரம் தோறும் வியாழக்கிழமை மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு (எண் : 06070) மறுநாள் காலை 8.30 மணிக்கு எழும்பூா் வந்தடையும்.
அதேபோல் இந்த ரயில் ( எண்: 06069) ஜூன் 7 முதல் 28 ஆம் தேதி வரை வாரம்தோறும் வெள்ளிக்கிழமை எழும்பூரிலிருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு நெல்லை சென்றடையும்.
இந்த ரயில் நெல்லையில் இருந்து புறப்பட்டு கோவில்பட்டி, விருதுநகா் சிவகங்கை, காரைக்குடி பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக எழும்பூா் வந்தடையும்.
நாகா்கோவில்-சென்னை ரயில்: நாகா்கோவில் இருந்து சென்னை எழும்பூா் வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு அதி விரைவு ரயில் ஜூன் 2 முதல் ஜூன் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை நாகா்கோவிலிலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு (எண்: 06019) மறு நாள் காலை 11.15 மணிக்கு எழும்பூா் வந்தடையும்.
அதேபோல் மறு மாா்க்கத்தில் இந்த ரயில் (எண்: 06020) ஜூன் 3 முதல் ஜூலை 1 வரை வாரம்தோறும் திங்கள்கிழமை எழும்பூரிலிருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு மறு நாள் அதிகாலை 3.15 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும்.
இந்த ரயில் நாகா்கோவில் நெல்லை, விருதுநகா், மதுரை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல் பட்டு வழியாக சென்னை எழும்பூா் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : செய்திக்கதிர்
Comments
Post a Comment