SIP SBI CALCULATOR
SIP MUTUAL FUNDS
SIP MUTUAL FUND INVESTMENTS
ரூ. 1,000 முதலீட்டில் ரூ. 3.5 கோடி லாபம்.. அசத்தலான SIP முதலீடு.. செம வாய்ப்பு!
Article courtesy : Tamil.Good returns.com
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்று சொல்லப்படுகிற SIP இன்வெஸ்ட்மென்ட் ஆப்ஷன் உள்ளது. இதன் மூலம் மொத்தமாக முதலீடு செய்யாமல், மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம். SIP முதலீடு, பல முதலீட்டாளர்களுக்கும் பிரபலமான தேர்வாக உள்ளது. மேலும், மாத சம்பளம் பெறுபவர்களுக்கும் மாதாந்திர அடிப்படையில் முதலீடு செய்வது, வசதியான ஒன்றாகக் கருதப்படுகிறது. மாதம் ரூ. 100 முதல் SIPகளில், நீங்கள் முதலீடு செய்யலாம்.
மியூச்சுவல் ஃபண்ட் SIP கால்குலேட்டர்: நீங்கள் உங்களுடைய 20ஆவது வயது முதல் சம்பாதிக்கிறீர்கள். அப்பொழுது உங்களுடைய மாத சம்பளம் ரூ. 10,000, மேலும் நீங்கள் உங்கள் பெற்றோருடன் வசித்து வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் வீட்டு வாடகைக்கான செலவுகளைத் தவிர்த்து, அதில் கணிசமான அளவு பணத்தை மிச்சப்படுத்தலாம். குறிப்பாக மியூச்சுவல் ஃபண்ட்-இன் SIP-கள் வழியாக குறைந்த அளவிலான முதலீட்டை செய்யலாம். அதற்கு நீங்கள் 50/20/20/10 என்ற ஃபார்முலாவைப் பயன்படுத்தலாம்.
இந்த ஃபார்முலாவில் 50 என்பது உங்களுடைய வழக்கமான செலவுகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக நீங்கள் ஒதுக்க வேண்டிய தொகையை குறிக்கிறது. 20 என்பது ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு போன்ற ஓய்வு நேர நடவடிக்கைகளுக்கு, நீங்கள் ஒதுக்க வேண்டிய தொகையை குறிக்கிறது. அடுத்த 20 என்பது, வருங்காலத்தில் புதிய கார் வாங்குவது போன்ற பெரிய இலக்குகள் இருந்தால் அதனை அடைவதற்காக சேமிப்பதை உணர்த்துகிறது. மீதமுள்ள 10% மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடு தொடங்குவதைக் குறிக்கிறது.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில், உங்களுடைய 10 சதவீத சம்பளத்தை அதாவது, மேலே குறிப்பிடப்பட்டதுபோல் ரூ. 10,000 பெறுபவராக இருந்தால், ரூ. 1,000 ரூபாயை மியூச்சுவல் ஃபண்ட் SIP திட்டத்தில் முதலீடு செய்து 12 சதவீத வருமானத்தை பெறுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். கடந்த 10 ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்ட்-இன் செயல்பாட்டின் அடிப்படையில், நல்ல லாபத்தை நீங்கள் பெற முடியும். இதே போல் தொடர்ந்து உங்கள் முதலீட்டு காலம் முழுவதும், முதலீடு செய்து வந்தால் 60 வயதை அடையும் போது நீங்கள் கோடீஸ்வரராக முடியும்.
அதேபோல், ரூ.1,000 SIP முதலீட்டில், 15 % ரிட்டர்ன்ஸ் பெறுகிறீர்கள் என்றால், கூட்டு வட்டி முறையில், உங்களுடைய வருமானம் ரூ.1,19,000,00 ஆக இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் உங்கள் SIP முதலீட்டு தொகையை 10% அதிகரித்தால், உங்கள் வருமானம் ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து கொண்டே இருக்கும். இதன் மூலம் 40 ஆண்டுகளில் ரூ. 3.5 கோடி ரூபாய் வரை நீங்கள் பெற முடியும்.
ஆனால் முதலீடு செய்வதற்கு முன்பு, உங்கள் நிதி ஆலோசகரை அணுகி தக்க ஆலோசனை பெற்று ஒன்றுக்கு இருமுறை யோசித்து, சுய விருப்பத்துடன் முதலீடு செய்யவும்.
CLICK HERE FOR SIP SBI CALCULATOR
Comments
Post a Comment