SBI SIP CALCULATOR
அதிக ரிட்டர்ன்ஸ் பெற்று தந்த SBI மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!
Article : Tamil good returns by Priyadharshini
SBI மியூச்சுவல் ஃபண்ட் என்பது SBI நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்களின் அடிப்படையில் (AUM), இந்தியாவின் மிகப்பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமாக உள்ளது.
AMFI-இன் ஜனவரி முதல் மார்ச் வரையிலான தரவுகளின்படி, அதன் மொத்த சொத்து ரூ. 91,436,530.10 கோடியாக உள்ளது. இது ஈக்விட்டி ஃபண்டுகள், ஹைப்ரிட் பண்டுகள் மற்றும் பிற வகைகளில் பல மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை வழங்குகிறது. அதேபோல, சில SBI மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. SIP வருமானம் மற்றும் மொத்த தொகை முதலீட்டின் அடிப்படையில் கடந்த 3 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட 5 SBI மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் பார்ப்போம்.
SBI PSU ஃபண்ட்:
கடந்த 3 ஆண்டுகளில் SBI PSU ஃபண்ட் சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதன்படி கடந்த 3 ஆண்டுகளில் ஃபண்டில் மொத்தமாக முதலீடு செய்தவர்களுக்கு மொத்த வருடாந்திர வருமானம் 41.44 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில் அதன் வருடாந்திர SIP வருமானம் 58.09 சதவீதமாக உள்ளது. இந்த ஃபண்டின் நிர்வாகத்தின் கீழ் சுமார் ரூ. 2,352 கோடி சொத்துக்கள் உள்ளன. அதன் நிகர சொத்து மதிப்பு (NAV) ரூ. 35.56 ஆகும்.
SBI PSU ஃபண்டில் குறைந்தபட்ச SIP முதலீடு ரூ. 500 ரூபாய், அதுவே நீங்கள் மொத்தமாக முதலீடு செய்தல் குறைந்தபட்ச முதலீடு ரூ. 5,000. கடந்த 3 ஆண்டுகளில் இந்த ஃபண்டில் ரூ.10,000 ரூபாய் SIP முதலீடு செய்திருந்தால், மொத்தமாக 3.60 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள். அதன் விளைவாக தற்போது ரூ. 7,87,000 ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும்...
SBI இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபண்ட்:
இந்த இன்ஃப்ரா ஃபண்ட் இரண்டாவது சிறந்த ஃபண்ட் ஆகும். இந்த ஃபண்டின் நிர்வாகத்தின் கீழ் சுமார் ரூ. 2,794 கோடி சொத்துக்கள் (AUM) உள்ளன மற்றும் அதன் நிகர சொத்து மதிப்பு (NAV) ரூ. 51.57 ரூபாய். கடந்த 3 ஆண்டுகளில் ஃபண்டில் மொத்தமாக முதலீடு செய்தவர்களுக்கு வருடாந்திர மொத்த வருமானம் 32.92 சதவிகிதம் ஆகும். அதே சமயம் ஃபண்டின் வருடாந்திர SIP வருமானம் 39.75 சதவிகிதம் ஆகும். இன்ஃப்ரா ஃபண்டில் ரூ.10,000 மாதாந்திர SIP முதலீடு செய்தவர்கள் தற்போது மொத்தமாக ரூ.6,28,000 லட்சத்தை பெற்றிருப்பார்கள். மொத்தமாக 3 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த ஃபண்டில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தவர்களுக்கு தற்போது ரூ.2,35,000 ரூபாய் கிடைத்திருக்கும்.
SBI லாங் டெர்ம் ஈக்விட்டி ஃபண்ட்:
SBI லாங் டெர்ம் ஃபண்ட், கடந்த 3 ஆண்டுகளில் 36.05 சதவிகிதம் வருடாந்திர SIP வருமானத்தையும், 28.16 சதவிகிதம் வருடாந்திர மொத்த வருமானத்தையும் அளித்துள்ளது. இந்த ஃபண்டின் AUM மதிப்பு ரூ. 23,412 கோடி. இது 11 ஆண்டுகள் பழமையான ஃபண்ட். இதில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10,000 மாத SIP முதலீடு செய்தவர்கள், தற்போது ரூ. 5,99,000 பெற்றிருப்பார்கள். மொத்த தொகையாக ரூ.1,00,000 லட்சம் முதலீடு செய்தவர்களுக்கு, தற்போது ரூ.2.11 லட்சம் கிடைத்திருக்கும். SBI கான்ட்ரா ஃபண்ட்: இந்த ஃபண்ட் 3 வருட காலக்கெடுவில் 33.51 சதவீத வருடாந்திர SIP வருமானத்தையும், 29.93 சதவீத வருடாந்திர மொத்த வருமானத்தையும் அளித்துள்ளது. ஜனவரி 1, 2013 இல் தொடங்கப்பட்ட, இந்த ஃபண்டின் கீழ் ரூ. 29,586 கோடி சொத்துகள் உள்ளன. ஃபண்டில் ரூ.10,000 மாதாந்திர SIP முதலீடு செய்தவர்கள், தற்போது ரூ.5,79,000 ஈட்டி இருப்பார்கள்.
SBI ஸ்மால் கேப் ஃபண்ட்:
கடந்த 3 வருடத்தில், இந்த SBI ஸ்மால் கேப் ஃபண்ட், 27.53 சதவிகித வருடாந்திர SIP வருமானத்தையும், 24.47 சதவிகித வருடாந்திர மொத்த வருமானத்தையும் கொடுத்துள்ளது. அதே, ஃபண்டில் ரூ.10,000 மாத SIP முதலீடு செய்தவர்கள், தற்போது ரூ.5,35,000 ரூபாய் பெற்றிருப்பார்கள். ரூ. 1,00,000 மொத்த முதலீடு செய்தவர்களுக்கு தற்போது ரூ.1,93,000 லட்சம் கிடைத்திருக்கும்.
Article courtesy : Tamil good returns / website
Read more at link : https://tamil.goodreturns.in/news/top-5-sbi-mutual-funds-in-3-years-best-returns-on-sip-investments-045577.html
Comments
Post a Comment