LAW COLLEGE ADMISSION 2024
சட்ட கல்லூரி மாணவர் சேர்க்கை 2024
Image : Pintrest app
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் 14 அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ், சென்னையில் இயங்கும் ஒரு சீர்மிகு சட்டப்பள்ளிக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
5 ஆண்டு ஒருங்கிணைந்த இளநிலை சட்டப் படிப்புகள்:
பி.ஏ.,எல்எல்.பி., -ஹானர்ஸ்பி.பி.ஏ.,எல்எல்.பி., - ஹானர்ஸ்பி.காம்.,எல்எல்.பி., - ஹானர்ஸ்பி.சி.ஏ.,எல்எல்.பி., - ஹானர்ஸ்
கல்வி நிறுவனம்:
சீர்மிகு சட்டப்பள்ளி, சென்னை
கல்வித் தகுதி:
12ம் வகுப்பில் குறைந்தது 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
5 ஆண்டு ஒருங்கிணைந்த இளநிலை சட்டப் படிப்பு:
பி.ஏ.,எல்எல்.பி.,
கல்வி நிறுவனங்கள்:
சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி - புதுப்பாக்கம் மற்றும் மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம், சேலம், காரைக்குடி, நாமக்கல், தேனி ஆகிய நகரங்களில் செயல்படும் அரசு சட்டக்கல்லூரிகள், தனியார் கல்லூரிகளான சரஸ்வதி சட்டக்கல்லூரி - திண்டிவனம் மற்றும் மத்திய சட்டக்கல்லூரி - சேலம்.
கல்வித் தகுதி:
12ம் வகுப்பில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
விண்ணப்பிக்கும் முறை:
அனைத்து அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளில் சேர்க்கை பெற ஓர் விண்ணப்பம் போதுமானது. சீர்மிகு சட்டப்பள்ளியில் வழங்கப்படும் ஒவ்வொரு படிப்பிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இவை அனைத்திற்கும் www.tndalu.ac.in எனும் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்:
மே 31
விபரங்களுக்கு:
இணையதளம்:
www.tndalu.ac.inதொலைபேசி:
044-24641919 / 24957414
நன்றி : தினமலர் / கல்வி மலர்
Comments
Post a Comment