KABOSU DIES
மீம் புகழ் "கபோசு" உயிரிழப்பு.
சமூக ஊடகங்கள் மூலம் மீம் கிரியேட்டர்களால் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது கபோசு என்ற நாய். இந்த நாய் கொடுக்கும் முக பாவனைகளைக் கொண்டு ஏராளமான மீம்கள் வெளிவந்தன.
பிரபலமான கதாபாத்திரங்களை மீம்களில் குறிப்பிடுவது போன்று, கபோசுவை வைத்தும் மீம்கள் பிரபலமானது. ஜப்பானை சேர்ந்த ஒருவர் கடந்த 2008ம் ஆண்டு கபோசுவை தத்தெடுத்து வளர்த்து வந்தார்.
2010ம் ஆண்டு அதன் உரிமையாளர் கபோசுவைக் கொண்டு ஒரு போட்டோஷூட் நடத்தினார். அப்போது, கபோசு கொடுத்த அழகான போஸ்களும், ரியாக்ஷன்களும் இணையத்தில் பகிரப்பட்டன. இதையடுத்து, நெட்டிசன்கள் கபோசுவின் இந்த புகைப்படங்களை மீம்களாக உருவாக்கியதன் மூலம் பிரபலமானது.
இதைதொடர்ந்து, 2013ம் ஆண்டில் கபோசுவின் படத்தை பயன்படுத்தி கிரிப்டோகரன்சியான Dogecoinஐ லோகோ உருவாக்க தூண்டியது. 17 வயதான கபோசு கடந்த 2022ம் ஆண்டு முதல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு வந்தது.
கபோசு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை தூக்கத்தில் அமைதியாக உயிரிழந்துள்ளது. இதுகுறித்து Dogecoin தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், கபோசுவின் மறைவு சமூக வளைத்தளத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி : செய்திக்கதிர்
Comments
Post a Comment