சட்ட கல்லூரி மாணவர் சேர்க்கை 2024 Image : Pintrest app தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் 14 அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ், சென்னையில் இயங்கும் ஒரு சீர்மிகு சட்டப்பள்ளிக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 5 ஆண்டு ஒருங்கிணைந்த இளநிலை சட்டப் படிப்புகள்: பி.ஏ.,எல்எல்.பி., -ஹானர்ஸ்பி.பி.ஏ.,எல்எல்.பி., - ஹானர்ஸ்பி.காம்.,எல்எல்.பி., - ஹானர்ஸ்பி.சி.ஏ.,எல்எல்.பி., - ஹானர்ஸ் கல்வி நிறுவனம்: சீர்மிகு சட்டப்பள்ளி, சென்னை கல்வித் தகுதி: 12ம் வகுப்பில் குறைந்தது 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். 5 ஆண்டு ஒருங்கிணைந்த இளநிலை சட்டப் படிப்பு: பி.ஏ.,எல்எல்.பி., கல்வி நிறுவனங்கள்: சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி - புதுப்பாக்கம் மற்றும் மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம், சேலம், காரைக்குடி, நாமக்கல், தேனி ஆகிய நகரங்களில் செயல்படும் ...