MISS UNIVERSE 2024
மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை தட்டி தூக்கினார் 60 வயது மூதாட்டி
அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்று அதிக வயதில் பட்டத்தை வென்றவர் என்ற சாதனை படைத்துள்ளார்.
1952-ம் ஆண்டு முதல் மிஸ் யுனிவர்ஸ் ( பிரபஞ்ச அழகி ) போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியில் கலந்து கொள்வோரின் வயது வரம்பு 18 முதல் 28 எனவும், திருமணம் ஆகி இருக்க கூடாது எனவும் விதி முறைகள் வகுக்கப்பட்டு இருந்தது. இதனிடையே கடந்த ஆண்டு முதல் 18 வயது முதல் 73 வயது வரை போட்டியி்ல் கலந்து கொள்ளலாம் என வயதில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டன.
இதனையடுத்து அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்தவரும் வழக்கறிஞருமான அலெஜாண்ட்ரா மரிசா ரோட்ரிக்ஸ் என்பவர் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். மேலும் அதிக வயதில் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற முதல்பெண் என்ற பெருமையையும் பெற்றார்.
கடந்த 24 ம் தேதி நடைபெற்ற போட்டியில் 18 வயது முதல் 73 வயது வரை உள்ளோர் போட்டியிட்டனர். மொத்தம் 34 பேர் இறுதி சுற்றுக்கு தேர்வான நிலையில் அலெஜாண்ட்ரா மரிசா ரோட்ரிக்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.
நன்றி !
Source : செய்திக்கதிர்
Comments
Post a Comment