HEAT WAVES ALERT
வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்.
அடுத்த நான்கு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் அதிகபட்ச வெப்பநிலை 3-5 செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தி ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவரை மற்றும காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மேலும் தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் அதிகபட்ச வெப்பநிலை 3-5 செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்களில் 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 39-43 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35-39 செல்சியஸ் இருக்கக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்...
நன்றி!!
Source : செய்திக்கதிர்
Comments
Post a Comment