GRADUATION DAY
பட்டமளிப்பு விழா நடத்திய தொடக்கப்பள்ளி
ஐந்தாம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பட்டமளிப்பு விழா - அசத்தும் அரசுப் பள்ளிகள்
திருப்பூர் வடக்கு பூலுவ பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 700 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.இதில் ஐந்தாம் வகுப்பில் 180 மாணவ மாணவியர் பயில்கின்றனர்.
அவர்கள் அனைவருக்கும் நேற்று ஏப்ரல் 1 ந் தேதி பட்டமளிப்பு விழாவானது பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியை ஆரோக்கிய ஜாஸ்மின் மாலா தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர் குமார் முன்னிலை வகித்தார். திருப்பூர் வடக்கு வட்டார கல்வி அலுவலர் முஸ்ரக் பேகம் மாணவர்களுக்கு பட்டமளித்து சிறப்புரை வழங்கினார்.
பட்டமளிப்பு உடையினை பள்ளியின் சார்பிலேயே வாங்கப்பட்டு பள்ளியின் பெற்றோர்களால் தைத்து கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment