PARLIAMENT ELECTION 2024
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு 2024
ஏழு கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு.
மக்களவைத் தேர்தல்: தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு..
💥தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
💥ஜூன் 4 வாக்கு எண்ணிக்கை
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ்.சாந்து கூட்டாக செய்தியாளர் சந்திப்பு
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது!
மக்களவைத் தேர்தலில் 98.6 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.
நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
1.5 கோடி அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்-ராஜீவ் குமார், தலைமை தேர்தல் ஆணையர்
ஆண் வாக்காளர்கள் - 49.7 கோடி, பெண் வாக்காளர்கள் - 47.1 கோடி, மூன்றாம் பாலினம் - 48,044 பேர் உள்ளனர்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலை விட தற்போதைய தேர்தலில் வாக்காளர்கள் 6% அதிகம் -தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.
தமிழகத்தில் ஏப்.19ல் நாடாளுமன்ற தேர்தல்:
வேட்பு மனுத்தாக்கல் துவக்கம்: மார்ச் 20
வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள்: மார்ச் 27
வேட்பு மனுபரிசீலனை: மார்ச் 28
திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 30
வாக்குப்பதிவு: ஏப்ரல் 19
வாக்கு எண்ணிக்கை: ஜூன் 4
Comments
Post a Comment