PONGAL FESTIVAL 2024
PONGAL FESTIVAL 2024
பொங்கல் பண்டிகை
நமது வலைதளத்தின் வாசகர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
- TNSOCIALPEDIA
பொங்கல் திருநாளானது ஒரு அறுவடை பண்டிகை நாள் ஆகும். அது செழிப்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் நாட்டில் விவசாயம் செழிக்க உதவிய இயற்கைக்கு நன்றி செழுத்தும் விதமாகவே தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர். பொங்கல் தினங்களில் வீட்டின் வெளியில் கோலம் இடுகின்றனர். அந்த ஆண்டில் வயலில் அறுவடை செய்த புதிய அரிசியில் வெல்லம் நெய் சேர்த்து பொங்கல் தயாரித்து சூரியபகவானுக்கு படைக்கின்றனர்.
இப்படி கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவும் இந்த விழா கொண்டாடப்படுகிறது. மக்கள் இந்த பண்டிகையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உற்சாகமாக கொண்டாடி, சிறப்பாக தயாரிக்கப்பட்ட பொங்கல் பிரசாதத்தை உண்டு மகிழ்கின்றனர்.
தமிகத்தில் பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. 2024ல் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி தொடங்கி ஜனவரி 18ம் தேதி முடிவடையும். ஜனவரி 14 போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 15, தை பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 16, மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 17 மற்றும் கன்யா பொங்கல் ஜனவரி 18 அன்று கொண்டாடப்படுகிறது. பொங்கல் நாளில் இருந்து தமிழ் புத்தாண்டு தொடங்கும் என்பது ஒரு தரப்பினரின் நம்பிக்கையாக உள்ளது.
பொங்கல் வைக்க உகந்த நேரம்
பொங்கல் வைக்க நல்ல நேரம் திங்கள் கிழமை தை 1ம் தேதி காலை 6.30 முதல் 7.30 வரை நல்ல நேரம். மேலும் 9.30 முதல் 10.30 மணி வரை ஆகும். ஆனால் 7.30 மணி முதல் 9.30 மணி வரை ராகுகாலம் என்பதால் அந்த நேரத்தில் பொங்கல் வைப்பதை தவிர்க்க வேண்டும்...
Comments
Post a Comment