SCHOOLS HOLIDAY
SCHOOLS HOLIDAY
சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (7-12-2023) விடுமுறை அறிவிப்பு!
மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விடுமுறை அறிவித்தது தமிழக அரசு ..
தமிழகம் முழுவதும் நாளை முதல் டிச.22ஆம் தேதி வரை அரையாண்டு நடைபெறவிருந்தது. ஆனால், வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த 4 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும்: வெள்ளப் பாதிப்பு சீரான உடன் 4 மாவட்டங்களுக்கான தேர்வு தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது...
செங்கல்பட்டில் 6 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.07) விடுமுறை அறிவிப்பு.
‘மிக்ஜாம்’ புயல் காரணமாக, மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளையும் (டிச.07) விடுமுறை -மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்.
Comments
Post a Comment