LATEST TAMIL NEWS
LATEST TAMIL NEWS
NEWS HEADLINES TODAY
இன்றைய முக்கிய தலைப்பு செய்திகள்
22 DECEMBER 2023
அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் ஶ்ரீரங்கம்; நம்பெருமாள்
பகல் பத்து
திருமொழித்திருநாள்
ஒன்பதாம் திருநாள்
முத்துகுறி அலங்காரத்தில்
அர்ஜுன மண்டபத்தில்.
முத்து கபாய் ,முத்து நேர் கிரீடம் (சப்தாவரணத்தில் அணிவது) பங்குனி உத்திர பதக்கம்,
தாயார் பதக்கம்; ரங்கூன் அட்டிகை; முத்து அபய ஹஸ்தம்;முத்து கர்ண பத்ரம்; முத்து திருவடி, 2 வட முத்து மாலை அணிந்து; பின் சேவையில் - முத்தங்கி அணிந்து சேவை சாதிக்கிறார்...
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
2024-ம் ஆண்டு ஹஜ் பயணம் செல்பவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 15-ம் தேதி வரை நீட்டிப்பு.
நேற்றுடன் அவகாசம் முடிவடையவிருந்த நிலையில், பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இந்திய ஹஜ் அசோசியேஷன் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அறிவிப்பு...
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.
ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,825க்கும், ஒரு சவரன் ரூ.46,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் உயர்ந்து ரூ.80.70க்கு விற்பனையாகிறது.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ₹50 லட்சம் அபராதம் - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு...
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர் கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை கூடுதல் பொறுப்பு.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
நெல்லை, தூத்துக்குடியில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹6000 வழங்கப்படும்
தென்காசி, கன்னியாகுமரியில் பாதிப்புகளின் அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும்
பாதிக்கப்பட்ட விவசாய நிலம் ஹெக்டேருக்கு ₹17,000 வழங்கப்படும்
பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு ₹10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்-நெல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
எண்ணூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்:
வாழ்வாதாரம் பாதித்த 2,301 குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணம்.
எண்ணெய் கசிவால் சேதமடைந்த 787 படகுகளுக்கு தலா 10,000 ரூபாய் நிவாரணம்.
சிபிசிஎல் நிறுவனம் 7 கோடியே 53 லட்ச ரூபாயை பசுமை தீர்ப்பாயத்தில் செலுத்த இருப்பதாகவும் தகவல்-தமிழக அரசு.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
2024 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது.
மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) தேர்வு செய்து வருகிறது.
அதன்படி, ஒருங்கிணைந்த மேல்நிலைப் பள்ளி அளவிலான தேர்வு (சிஎச்எஸ்எல்- CHSL Combined Higher Secondary (10+2) Level Examination, முதல் நிலைத் தேர்வு (Tier-1) அடுத்தாண்டு ஜூன் - ஜூலை மாதத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு (சிஜிஎல்- CGL Combined Graduate Level - முதல் நிலைத் தேர்வு (Tier-1) அடுத்தாண்டு செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை பொறியாளர் (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts) தேர்வு முதல் தாள் (CBE) அடுத்தாண்டு மே - ஜூன் மாதத்தில் நடைபெறும்.
Comments
Post a Comment