LATEST OFFERS ON MARUTI CARS
கார் மாடல்களுக்கு தள்ளுபடியை அள்ளி வீசிய மாருதி சுசுகி - ரூ.2.3 லட்சம் வரை விலை குறைப்பு
ஆண்டு இறுதியை ஒட்டி பல்வேறு கார் மாடல்களுக்கு மாருதி சுசுகி நிறுவனம் தள்ளுபடி வழங்கியுள்ள சூழலில், அதிகபட்சமாக ஜிம்னி மாடலுக்கு ரூ.2.3 லட்சம் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டு இறுதி சலுகை:
நடப்பாண்டில் உற்பத்தி செய்யப்பட்டு இன்னும் விற்பனை நிலையங்களில் உள்ள பல்வேறு மாடல் கார்களுக்கும், மாருதி சுசுகி நிறுவனம் ஏராளமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது. விற்பனை நிலையங்களில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆல்டோ 800 தொடங்கி டிசைர் வரையிலான பல்வேறு மாடல்களுக்கும் சலுகை வழங்கப்படுகிறது.
Maruti Suzuki Alto 800:
ஆல்டோ 800 மாடல் காரின் உற்பத்தியில் ஏற்கனவே நிறுத்தப்பட்டு விட்டது. இருப்பினும் மீதமுள்ள யூனிட்களை விற்று தீர்க்க டீலர்கள் முயற்சிக்கின்றனர். அதன்படி, மாருதி சுசுகி நிறுவனம் CNG உட்பட அனைத்து வேரியண்களுக்கும் ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையை வழங்குகிறது. ஆல்டோ 800 இன் விலை ரூ. 3.54 லட்சத்தில் இருந்து ரூ.5.13 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Maruti Suzuki Alto K10:
ஆல்டோ கே10 மாடலில் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் என இரண்டு வகைகளிலும், ரூ.54,000 மதிப்பிலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதில் ரூ.35,000 வரை கேஷ் டவுன் தள்ளுபடி, ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.4,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி அடங்கும். சிஎன்ஜி வகைகளுக்கு ரூ.25,000 வரை ரொக்க தள்ளுபடி மற்றும் ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகிறது. ஆல்டோ கே10 காரின் விலை ரூ.3.99 லட்சம் தொடங்கி ரூ.5.96 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Maruti Suzuki S-Presso:
எஸ்-பிரஸ் மாடல் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி டிரிம்கள் இரண்டிலும் ஒரு பெரிய தள்ளுபடி ஒப்பந்தம் கிடைக்கிறது. தள்ளுபடியின்படி, AMT மற்றும் மேனுவல் உட்பட அனைத்து டிரிம்களிலும் ரூ.59,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. இதில் ரூ.35,000 ரொக்க தள்ளுபடி, ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.4,000 கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை அடங்கும். சிஎன்ஜி பதிப்புகள் ரூ.35,000 மற்றும் ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் ஆஃபருடன் மொத்தமாக ரூ.55,000 வரை கிடைக்கும். எஸ்-பிரஸ்ஸோ விலை ரூ.4.26 லட்சம் தொடங்கி ரூ.6.11 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Maruti Suzuki Eeco:
மாருதி சுசுகியின் Eeco பயணிகள் பதிப்பு, ஆம்புலன்ஸ் மற்றும் ஆம்புலன்ஸ் ஷெல் ஆகிய மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. அதில் பயணிகள் வேனுக்கான தள்ளுபடியின்படி, Eeco இன் பெட்ரோல் பதிப்பில் ரூ. 29,000 மதிப்புள்ள மொத்த சலுகை உள்ளது. இதில் ரூ.15,000 ரொக்க தள்ளுபடி, ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.4,000 கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை அடங்கும். மறுபுறம் Eeco CNG மாடலுக்கு, ரூ. 15,000 ரொக்க தள்ளுபடி மற்றும் ரூ. 10,000 மதிப்புள்ள எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்ளது. இந்த வேன் விலை ரூ.5.27 லட்சம் தொடங்கி ரூ.8.27 லட்சம் வரை நிர்ணயிக்கப்படுள்ளது.
Maruti Suzuki WagonR:
வேகன்ஆர் பெட்ரோல் வேர்யண்டிற்கு ரூ.54,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி, ரூ.30,000 ரொக்க போனஸ், 7 ஆண்டுகளுக்கு குறைவான காருக்கு ரூ.20,000 வரையிலும், பழைய வாகனத்திற்கு ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட டிரிம்களில் ரூ.4,000 வரை கூடுதல் கார்ப்பரேட் சலுகையும் உள்ளது. 4,000 கார்ப்பரேட் சலுகையை தவிர்த்து, வேகன்ஆர் சிஎன்ஜி அதன் பெட்ரோல் வேர்யண்டிற்கான அதே சலுகையை பெறுகிறது. வேகன்ஆர் காரின் விலை ரூ.5.54 லட்சம் தொடங்கி ரூ.7.30 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Maruti Suzuki Celerio:
செலிரியோ மாடலுக்கு ரூ.35,000 ரொக்க தள்ளுபடி, ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் சலுகை மற்றும் ரூ.4,000 கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. CNG மாடலுக்கு கார்ப்பரேட் தள்ளுபடி இல்லாததால், அதற்கு ரூ.55,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதன் விலை ரூ.5.36 லட்சத்தில் இருந்து ரூ.7.14 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Maruti Suzuki Swift:
ஆண்டு இறுதியை ஒட்டி ஸ்விஃப்ட் பெட்ரோல் மாடலில் AMT மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆகிய இரண்டுக்கும், ரூ.54,000 வரையிலான பலன்கள் கிடைக்கிறது. இதில் ரூ.30,000 ரொக்க தள்ளுபடி, கார் 7 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால் ரூ.20,000 வரையிலும், பழைய காருக்கு ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. தொடக்க நிலை LXi பதிப்பு ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் மட்டுமே கிடைக்கும். 4,000 கார்ப்பரேட் சலுகையும் உள்ளது. இந்த சலுகைகள் அனைத்தும் ஸ்விஃப்ட் பெட்ரோலுக்கு மட்டுமே கிடைக்கும்.
Maruti Suzuki Dzire:
மாருதி சுசுகி டிசையர் மீது ரூ. 20,000 மதிப்பிலான அரிய தள்ளுபடியை வழங்குகிறது. இதில் ரூ. 10,000 ரொக்க சலுகையாகவும் மற்றும் ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகவும் வழங்கப்படுகிறது. டிசையர் சிஎன்ஜியில் தள்ளுபடி இல்லை.
Maruti Suzuki Jimny:
ஜிம்னி கார் மாடலின் இரண்டு வேரியண்ட்களின் விலையையும் மாருதி சுசுகி நிறுவனம் ஏற்கனவே, 2 லட்சம் வரை டிசம்பர் மாத தொடக்கத்தில் அந்நிறுவனம் குறைத்தது. இந்நிலையில் சில டீலர்கள் தனிப்பட்ட முறையில் 30 ஆயிரம் ரூபாய் வரையிலான தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment