WORLD CUP 2023
WORLD CUP 2023
இலங்கை அணியை சுருட்டி வீசிய இந்தியா.
Image courtesy : ICC CWC 2023
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 358 ரன்களை துரத்தி விளையாடிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இலங்கை அணி இழந்தது. இந்திய அணி 302 ரன்களை வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முகமது சமி 5 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். உலக கோப்பை போட்டியில் இதுவரையில் நடைபெற்ற 7 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து, இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
சாதனை படைத்தார் ஷமி.
இலங்கைக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது ஷமி, உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக மாறி வரலாற்று சாதனை.
உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த ஜாகீர் கான் (44), ஜவஹல் ஸ்ரீநாத்தை (44) பின்னுக்கு தள்ளி 45 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தல்.
Comments
Post a Comment