RASI PALAN TODAY
RASI PALAN TODAY 24 NOVEMBER 2023
இன்றைய நாள் பலன்
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய CLICK HERE
https://www.tnsocialpedia.com/2023/11/rasi-palan-today_19.htmlஇன்றைய (24-11-2023) ராசி பலன்கள்
மேஷம்
ஆடம்பர செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். திடீர் பயணங்கள் உண்டாகும். சகோதரர் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வழக்கு விஷயங்களில் மாற்றமான சூழல் அமையும். பிரச்சனைகளில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். உத்தியோகப் பணிகளில் விவேகம் வேண்டும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அஸ்வினி : நெருக்கடிகள் ஏற்படும்.
பரணி : மாற்றமான நாள்.
கிருத்திகை : விவேகம் வேண்டும்.
---------------------------------------
ரிஷபம்
பேச்சுக்களால் நட்பு வட்டம் விரிவடையும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கடன் சார்ந்த உதவி கிடைக்கும். பொதுப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உத்தியோகத்தில் மதிப்பு மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கிருத்திகை : நட்பு விரிவடையும்.
ரோகிணி : இலக்குகள் பிறக்கும்.
மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.
---------------------------------------
மிதுனம்
மனதில் விதவிதமான சிந்தனைகள் பிறக்கும். உறவுகளின் வழியில் ஆதரவு ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வீடு, வாகனங்களைச் சரி செய்வீர்கள். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். அலுவலகத்தில் ஒத்துழைப்பு மேம்படும். எதிர்ப்பு குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிஷம் : சிந்தனைகள் பிறக்கும்.
திருவாதிரை : கருத்து வேறுபாடுகள் குறையும்.
புனர்பூசம் : ஒத்துழைப்பு மேம்படும்.
---------------------------------------
கடகம்
இழுபறியான பூர்வீகப் பிரச்சனைகள் குறையும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதுவிதமான பயணங்களின் மூலம் அனுபவம் உண்டாகும். நிர்வாகப் பணிகளில் சிறு சிறு மாற்றங்களின் மூலம் மேன்மை ஏற்படும். எழுத்துத் துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.
பூசம் : அனுபவம் உண்டாகும்.
ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
சிம்மம்
வாக்குறுதி அளிக்கும் பொழுது சிந்தித்துச் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். மூத்த உடன்பிறப்புகளிடம் அனுசரித்துச் செல்லவும். மனதில் புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : சிந்தித்துச் செயல்படவும்.
பூரம் : அனுபவம் ஏற்படும்.
உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.
---------------------------------------
கன்னி
மறைவான திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உறவுகளின் வழியில் ஆதாயம் உண்டாகும். புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்குவீர்கள். வாகனப் பழுதுகளைச் சரி செய்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடிவரும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அஸ்தம் : பழுதுகளைச் சரி செய்வீர்கள்.
சித்திரை : சாதகமான நாள்.
---------------------------------------
துலாம்
ஆன்மிகப் பணிகளில் தெளிவு ஏற்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பணிபுரியும் இடத்தில் ஆதாயகரமான சூழல் அமையும். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். நெருக்கமானவர்களின் சந்திப்பு ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
சித்திரை : தெளிவு ஏற்படும்.
சுவாதி : தேடல் பிறக்கும்.
விசாகம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
---------------------------------------
விருச்சிகம்
எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நினைத்த பணிகளைச் செய்து முடிப்பீர்கள். பெருந்தன்மையான செயல்கள் நன்மதிப்பை ஏற்படுத்தும். எதிலும் சிக்கனமாகச் செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். கலைகள் மீது தனிப்பட்ட ஈர்ப்பு ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
விசாகம் : சிந்தனைகள் மேம்படும்.
அனுஷம் : மதிப்பு அதிகரிக்கும்.
கேட்டை : ஈர்ப்பு ஏற்படும்.
---------------------------------------
தனுசு
புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். சுபகாரிய பயணங்கள் கைகூடிவரும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் உண்டாகும். அரசு வகையில் ஆதரவு மேம்படும். பொது வாழ்வில் செல்வாக்கு அதிகரிக்கும். இடமாற்ற எண்ணங்களைத் தவிர்ப்பது நல்லது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். வாகனப் பழுதுகளைச் சரி செய்வீர்கள். உறவுகளின் சந்திப்புகளால் சந்தோஷம் ஏற்படும். வருத்தம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : அறிமுகம் ஏற்படும்.
பூராடம் : ஆதரவு மேம்படும்.
உத்திராடம் : சந்தோஷம் ஏற்படும்.
---------------------------------------
மகரம்
நடைமுறை தேவைகள் பூர்த்தியாகும். கூட்டு முயற்சியில் சிந்தித்துச் செயல்படவும். குடும்பப் பிரச்சனைகள் அகலும். புதிய பணியாளர்களைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். புகழ் மிக்கவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திராடம் : சிந்தித்துச் செயல்படவும்.
திருவோணம் : ஆர்வம் பிறக்கும்.
அவிட்டம் : கட்டுப்பாடு வேண்டும்.
---------------------------------------
கும்பம்
குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விளையாட்டான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். தடைபட்ட சில வரவுகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவருடன் அனுசரித்துச் செல்லவும். பணியில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். உற்சாகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அவிட்டம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
சதயம் : அனுபவம் கிடைக்கும்.
பூரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும்.
---------------------------------------
மீனம்
ஆரோக்கியம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். உயர் அதிகாரிகளைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். கலைத்துறைகளில் சில வாய்ப்புகள் கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.
உத்திரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.
ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
Comments
Post a Comment