RASI PALAN TODAY
RASI PALAN TODAY
இராசிபலன் 15 நவம்பர் 2023
SOURCE : நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது.
நன்றி : நித்ரா தமிழ் நாட்காட்டி
இன்றைய (15-11-2023) ராசி பலன்கள்
மேஷம்
நினைத்த காரியங்களை முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரப் பணிகளில் மந்தத்தன்மை ஏற்பட்டு நீங்கும். விற்பனை பிரிவில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் ஏற்படும். வழக்குப் பணிகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அனுசரித்துச் செல்லவும். தாய்மாமன் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். காப்பீட்டுத் துறைகளில் ஆதாயம் உண்டாகும். சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : அலைச்சல்கள் உண்டாகும்.
பரணி : அனுபவம் ஏற்படும்.
கிருத்திகை : அனுசரித்துச் செல்லவும்.
---------------------------------------
ரிஷபம்
பேச்சுவார்த்தைகளின் மூலம் சாதகமான சூழல் அமையும். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பான சூழல் அமையும். லாபத்தை மேம்படுத்தும் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். எதையும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். பிரபலமானவர்களின் தொடர்பு உண்டாகும். சிற்றின்ப செயல்களில் ஆர்வம் ஏற்படும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
கிருத்திகை : சாதகமான நாள்.
ரோகிணி : சூட்சுமங்களை அறிவீர்கள்.
மிருகசீரிஷம் : ஆர்வம் ஏற்படும்.
---------------------------------------
மிதுனம்
தாமதமான சில பணிகளால் மனதில் குழப்பம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். போட்டிகளைச் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வழக்கு விஷயங்களில் சாதகமான சூழல் அமையும். உடல் ஆரோக்கிய இன்னல்கள் குறையும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
மிருகசீரிஷம் : குழப்பமான நாள்.
திருவாதிரை : பக்குவம் ஏற்படும்.
புனர்பூசம் : இன்னல்கள் குறையும்.
---------------------------------------
கடகம்
ஒப்பந்தப் பணிகள் கைகூடிவரும். உள்ளுணர்வு சிந்தனைகளின் மூலம் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். பழைய கடன் சார்ந்த பிரச்சனைகளைத் தீர்க்க உதவி கிடைக்கும். மனதில் எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கையும், புத்துணர்ச்சியும் ஏற்படும். பணிகளில் எதிர்பார்த்த சில இடமாற்றங்கள் சாதகமாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வருத்தம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : முடிவு பிறக்கும்.
பூசம் : உதவி கிடைக்கும்.
ஆயில்யம் : இடமாற்றம் சாதகமாகும்.
---------------------------------------
சிம்மம்
மனதளவில் புதுவிதமான நம்பிக்கை பிறக்கும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். வியாபார நெருக்கடிகள் விலகும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும். வாகனப் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். பிரச்சார பணிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மகம் : நம்பிக்கை பிறக்கும்.
பூரம் : நெருக்கடிகள் விலகும்.
உத்திரம் : வாய்ப்புகள் அமையும்.
---------------------------------------
கன்னி
வேலையில் உள்ளவர்களுக்குப் புதுவிதமான அனுபவம் உண்டாகும். விளையாட்டு செயல்களில் புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள். இனம்புரியாத சில கவலைகள் ஏற்பட்டு நீங்கும். அலைபேசி வாயிலாக மகிழ்வான செய்திகள் கிடைக்கும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதரர்களின் வழியில் மேன்மை ஏற்படும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : புதுமையான நாள்.
அஸ்தம் : கவலைகள் நீங்கும்.
சித்திரை : மேன்மை ஏற்படும்.
---------------------------------------
துலாம்
ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். பேச்சுக்களில் கடுமையைக் காட்டாமல் இருப்பது நன்மை தரும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் கைகூடும். விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை உருவாக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்வீர்கள். பணி நிமிர்த்தமான புதிய முயற்சிகள் ஈடேறும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.
சுவாதி : வாய்ப்புகள் கைகூடும்.
விசாகம் : முயற்சிகள் ஈடேறும்.
---------------------------------------
விருச்சிகம்
மூத்த உடன்பிறப்புகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான ஆசைகள் ஏற்பட்டு நீங்கும். புகழ்ச்சிக்குச் செவி சாய்க்காமல் இருக்கவும். எதிலும் தனித்துச் செயல்படுவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இணைய துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
விசாகம் : ஆதாயம் உண்டாகும்.
அனுஷம் : ஆசைகள் பிறக்கும்.
கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
தனுசு
நண்பர்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் சாதகமாகும். பலதரப்பட்ட மக்களின் தொடர்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிகத்தில் தெளிவு பிறக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : அனுபவம் கிடைக்கும்.
பூராடம் : மதிப்பு அதிகரிக்கும்.
உத்திராடம் : ஆர்வமின்மையான நாள்.
---------------------------------------
மகரம்
நிலுவையில் இருந்துவந்த செயல்களைச் செய்து முடிப்பீர்கள். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உடனிருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வாகனப் பயணத்தில் நிதானம் வேண்டும். உயர் அதிகாரிகளின் சந்திப்பு கிடைக்கும். முதலீடுகளின் மூலம் லாபம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் நன்மை ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : அனுபவம் வெளிப்படும்.
திருவோணம் : நிதானம் வேண்டும்.
அவிட்டம் : நன்மைகள் ஏற்படும்.
---------------------------------------
கும்பம்
மனதில் புதுவிதமான லட்சியங்கள் பிறக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் விவாதங்களைத் தவிர்க்கவும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் லாபம் உண்டாகும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம்: லட்சியங்கள் பிறக்கும்.
சதயம் : ஆர்வம் அதிகரிக்கும்.
பூரட்டாதி : மாற்றங்கள் ஏற்படும்.
---------------------------------------
மீனம்
தந்தை பற்றிய கவலைகள் தோன்றி மறையும். உணவுத்துறைகளில் திறமைகள் வெளிப்படும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.
உத்திரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
ரேவதி : தேடல் அதிகரிக்கும்.
---------------------------------------
Comments
Post a Comment