RASI PALAN TODAY
RASI PALAN TODAY
இன்றைய இராசி பலன்கள்
( 14 நவம்பர் 2023)
SOURCE : நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது.
-----------------------------------------
மேஷம்
வியாபாரம் சார்ந்த கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். அரசு சார்ந்த துறைகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். திடீர் வாய்ப்புகளின் மூலம் மாற்றம் பிறக்கும். புதிய இடத்திற்குச் செல்வதற்கான சூழல் அமையும். இனம்புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
அஸ்வினி : சிந்தித்துச் செயல்படவும்.
பரணி : மாற்றம் பிறக்கும்.
கிருத்திகை : குழப்பமான நாள்.
---------------------------------------
ரிஷபம்
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடிவரும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். உடல் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வர்த்தகப் பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். வருத்தம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : ஒற்றுமை அதிகரிக்கும்.
ரோகிணி : முடிவு கிடைக்கும்.
மிருகசீரிஷம் : சாதகமான நாள்.
---------------------------------------
மிதுனம்
செயல்பாடுகளில் திறமைகள் வெளிப்படும். பணி நிமிர்த்தமான அலைச்சல்கள் ஏற்படும். உற்பத்தித் துறைகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். போட்டி தொடர்பான விஷயங்களில் சாதகமான சூழல் உண்டாகும். எதிராக இருந்தவர்களைப் பற்றிப் புரிந்து கொள்வீர்கள். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
மிருகசீரிஷம் : அலைச்சல்கள் ஏற்படும்.
திருவாதிரை : சாதகமான நாள்.
புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
கடகம்
மனதளவில் உற்சாகமான சிந்தனைகள் உண்டாகும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். அரசு காரியங்களில் பொறுமை வேண்டும். நிர்வாகத்துறையில் திறமைகள் வெளிப்படும். பூர்வீக சொத்துக்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செல்லவும். நாவல் விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
புனர்பூசம் : ஒத்துழைப்பு மேம்படும்.
பூசம் : ஆதாயம் உண்டாகும்.
ஆயில்யம் : ஆர்வம் ஏற்படும்.
---------------------------------------
சிம்மம்
புதிய வாகனம் வாங்குவது சார்ந்த எண்ணங்கள் கைகூடிவரும். சிந்தனைப் போக்கில் மாற்றம் பிறக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். முக்கியமான பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். அரசு காரியங்கள் அனுகூலமாக முடியும். மேல்நிலைக் கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : மாற்றம் பிறக்கும்.
பூரம் : அனுகூலமான நாள்.
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
கன்னி
விடாப்பிடியாகச் செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். எதிலும் ஊக்கத்தோடு ஈடுபடுவீர்கள். எதிர்பாராத சுபச்செய்திகள் கிடைக்கும். கனவு தொடர்பான சில பிரச்சனைகள் குறையும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் ஈடுபாடு உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
உத்திரம் : இன்னல்கள் குறையும்.
அஸ்தம் : சுபமான நாள்.
சித்திரை : ஈடுபாடு உண்டாகும்.
---------------------------------------
துலாம்
நிதி தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளைத் துரிதமாகச் செய்து முடிப்பீர்கள். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : குழப்பம் நீங்கும்.
சுவாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
விசாகம் : துரிதம் உண்டாகும்.
---------------------------------------
விருச்சிகம்
ஆடம்பரமான சிந்தனைகள் மேம்படும். தந்தை வழியில் திடீர் செலவுகள் உண்டாகும். மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். தாய் வழியில் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகப் பணிகளில் தாமதம் உண்டாகும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளைத் தவிர்க்கவும். தெளிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : செலவுகள் உண்டாகும்.
அனுஷம் : அனுசரித்துச் செல்லவும்.
கேட்டை : கருத்துகளைத் தவிர்க்கவும்.
---------------------------------------
தனுசு
வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். பொருளாதாரத்தில் நெருக்கடியான சூழல் தோன்றி மறையும். உடன்பிறந்தவர்களின் மூலம் உதவி கிடைக்கும். எதிலும் அவசரமின்றி செயல்படவும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : சிந்தித்துச் செயல்படவும்.
பூராடம் : அனுபவம் கிடைக்கும்.
உத்திராடம் : அவசரமின்றி செயல்படவும்.
---------------------------------------
மகரம்
சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் குறையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபகரமான வாய்ப்புகள் அமையும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். புதிய நபர்களால் மாற்றமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
உத்திராடம் : குழப்பம் குறையும்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
---------------------------------------
கும்பம்
நேர்மறை சிந்தனைகளால் தெளிவு பிறக்கும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். மனதளவில் புதிய சிந்தனைகள் பிறக்கும். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். அதிகாரப் பணிகளில் கவனத்துடன் இருக்கவும். விவசாயம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம்: தெளிவு பிறக்கும்.
சதயம் : புதுமையான நாள்.
பூரட்டாதி : ஆலோசனைகள் கிடைக்கும்.
---------------------------------------
மீனம்
தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தந்தை வழியில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் மறையும். குருமார்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் சாதகமான சூழல் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். மறதி குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : நெருக்கடிகள் மறையும்.
உத்திரட்டாதி : சாதகமான நாள்.
ரேவதி : அனுபவம் உண்டாகும்.
---------------------------------------
நன்றி : நித்ரா தமிழ் நாட்காட்டி
Comments
Post a Comment