SCHOOL MORNING PRAYER ACTIVITIES 19 OCT 2023
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.10.2023
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : கள்ளாமை
குறள் :281
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
விளக்கம்:
அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது.
பழமொழி :
Eat to live: do not live to eat
வாழ்வதற்காக சாப்பிடு; சாப்பிடுவதற்காக வாழாதே
இரண்டொழுக்க பண்புகள் :
1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே எனது செயல்களை ஊக்கமுடன் செய்வேன்.
2. முயன்றால் பட்டாம்பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்.
பொன்மொழி :
உப்பும் ஆலோசனையும் கேட்டால்தான் கொடுக்க வேண்டும். -- இத்தாலி
பொது அறிவு :
1. சூரிய கிரகணம் நீடிக்கும் நேரம்?
7 நிமிடம் 58 வினாடிகள்.
2. வந்தே மாதரம் பாடலை எழுதியவார்?
பங்கிம் சந்திர சட்டர்ஜி
English words & meanings :
humus(ஹ்யூமஸ்)- the decay of vegetables in the soil making it rich. இலை, தழை மக்கிய மண். hunch (ஹன்ச்)- intuitive feeling உள்ளுணர்வு
ஆரோக்ய வாழ்வு :
சங்குப்பூ: சங்குப்பூ மலர்ச்சாறு, கல்லீரலை பலப்படுத்தும். தேமல் மற்றும் கரும்புள்ளிகளைக் குணமாக்கும். சங்குப்பூ வேர், சிறுநீர்ப்பை நோய்கள், மேகரணம், மாந்தம், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
நீதிக்கதை
பலமே கருணை
குருகுலத்தில் குரு சீடர்களுக்கு பாடம் நடத்தி முடித்ததும், பாடத்தில் சந்தேகம் இருந்தால் கேட்கலாம் என்றார். ஒரு சீடன், நாம் காணும் இந்த உலகம் நல்லதா? இல்லை கெட்டதா? என்று கேட்டான். அவர் அந்த சீடனிடம் எதிர்க்கேள்வியாக, நீ பூனையை பார்த்திருப்பாய் அல்லவா? அதன் பல்லால் நன்மையா; தீமையா? என்று கேட்டார். தான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், இப்படி எதையோ கேட்கிறாரே? என்று குழப்பத்துடன் விழித்தான் சீடன். அவனது தவிப்பை புரிந்து கொண்ட குருவே இதற்கு பதிலளித்தார். தாய்ப்பூனையின் பற்கள் கருணையின் இருப்பிடம். ஏனென்றால், குட்டி தாயைச் சார்ந்து இருக்கும்போது, தன் பல்லாலேயே மென்மையாகக் கவ்வி தூக்கிச் செல்லும். ஆனால், எலிக்கு அதன் பற்கள் விரோதி. இது தான் உன் கேள்விக்கும் பதில். எதுவுமே நல்லது தான். அதே நேரம் எதுவுமே கெட்டது தான். அவரவரைப் பொறுத்து, நன்மையும் தீமையும் மாறிக் கொண்டேயிருக்கும். அது போல, உலகம் என்பது, நாம் நடந்து கொள்வதைப் பொறுத்து நல்லதாகவும் கெட்டதாகவும் காட்சியளிக்கும், என்றார். சீடனுக்கு குருவின் பதிலும் புரிந்தது. உலக நடப்பும் புரிந்தது.
இன்றைய செய்திகள்
19.10.2023
*சென்னையில் முறையாக பதிவு செய்யப்படாத மகளிர் விடுதிகள் மீது நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.
* வடகொரியாவிற்கு பயணம் மேற்கொண்ட ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி.
* மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு; மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
*பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாட்டால் 48 விமானங்கள் ரத்து.
* இந்தியாவின் அதிரடி தொடருமா வங்காள தேசத்துடன் இன்று மோதல்.
* உலகக்கோப்பை கிரிக்கெட் 38 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து வெற்றி.
Today's Headlines
*Action will be taken against unregistered women's hostels in Chennai - District Collector warns.
* Russian Foreign Minister visits North Korea.
* Increase in dearness allowance for central government employees; Union Cabinet approved.
*48 flights were canceled due to fuel shortage in Pakistan.
* Will India's striking action continue? today India vs Bangladesh
* Netherlands won today's match for "Cricket World Cup" by 38 runs.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Comments
Post a Comment