REASON FOR THE EMERGENCY ALERT
நாடு முழுதும் அலறிய ஆன்ட்ராய்டு! செல்போனுக்கு வந்த எமர்ஜென்சி மெசேஜ்.. என்ன காரணம் ??
Video courtesy : Behind woods / YouTube
நாடு முழுவதும் நேற்று மதியம் 12 மணி முதல் 12.44 மணிக்குள் ஏராளமானவர்களின் ஆன்ட்ராய்ட் செல்போன்களுக்கு எமர்ஜென்சி அலர்ட் மெசேஜ் ‛பீப்' சத்தத்துடன் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அதன் பின்னணி குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
தற்போதைய சூழலில் செல்போன் இல்லாத வீடுகளே இல்லை. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ஆன்ட்ராய்டு செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செல்போனில் ஏராளமான வசதிகள் உள்ளன.
இன்னும் சொல்லப்போனால் மினி கம்ப்யூட்டர் என்றே கூறலாம். இதுமட்டுமின்றி ஒட்டுமொத்த உலகில் நடக்கும் விஷயங்களை நமக்கு ஆன்ட்ராய்டு செல்போன்கள் உள்ளங்கையில் கொண்டு வந்து தருகின்றன.
இத்தகைய சூழலில் தான் இன்று மதியம் 12 மணி முதல் 12.44 மணிக்குள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களின் ஆன்ட்ராய்டு செல்போன்களுக்கு ‛எமர்ஜென்சி அலர்ட் மெசேஜ்' ஒரு ‛பீப்' சத்தத்துடன் சென்றடைந்தது. அந்த மெசேஜில், ‛‛இந்த மெசேஜ் என்பது மத்திய அரசின் தொலை தொடர்பு துறையின் செல் பிராட்காஸ்டிங் சிஸ்டம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மெசேஜை நீங்கள் புறக்கணித்து விடுங்கள். இதற்கு ரீப்ளே எதுவும் செய்யவில்லை.
இந்த மெசேஜ் என்பது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பில் இந்தியா முழுவதும் எமர்ஜென்சி அலர்ட் விடுக்கும் பரிசோதனைக்கானது. இது அவசர காலத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன்கூட்டி எமர்ஜென்சி அலர்ட் செய்வதற்கான சோதனையை மேற்கொள்ள இந்த மெசேஜ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது'' என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது இந்தியா என்பது மக்கள் தொகையில் 2வது இடத்தில் உள்ளது. இதனால் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது என்பது மத்திய அரசின் நோக்கமாகும். தற்போது காலநிலை மாற்றம் உள்ளிட்டவற்றால் இயற்கை பேரிடர் அச்சுறுத்தல்கள் உள்ளன. திடீர் வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதனால் மக்களுக்கு ஒரே நேரத்தில் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்து அலர்ட் செய்ய வேண்டியது முக்கியமானதாகும். இப்படி முன்கூட்டியே அலர்ட் செய்யும் செயல்பாட்டை நடைமுறைக்கு கொண்டு வரும் வகையில் தான் தற்போது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலம் நாட்டில் உள்ள ஆன்ட்ராய்டு செல்போன்களில் பெரும்பாலானவற்றுக்கு இன்று ‛பீப்' சத்தத்துடன் எமர்ஜென்சி அலர்ட் மெசேஜ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்படி ஒருவரின் செல்போனுக்கு எமர்ஜென்சி அலர்ட் மெசேஜ் வருவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இதுபோல் மெசேஜ் அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி மத்திய டெலி கம்யூனிகேசன் துறையின் தலைமை செயல் அதிகாரி ராஜ்குமார் உபாத்யாய் கூறியதாவது:
‛‛நாட்டில் பேரிடர்கள் குறித்த முன்னறிவிப்புகளை செல்போன்கள் மூலம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் அனுப்ப இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் நெட்வோர்க்கள் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது'' என்றார்.
Comments
Post a Comment