REPCO FINANCE JOB VACANCY
ரெப்கோ வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு
டிகிரி முடித்தோருக்கு ரெப்கோ நிறுவனத்தில் வேலை..!
ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனத்தில் சீனியர் மேலாளர், மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த பணிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி ஜூன் 28ல் துவங்கியது. வரும் ஜூலை 19, 2023 விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
தகுதியும், ஆர்வமும் உடைய பட்டதாரிகள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.repcomicrofin.co.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
காலி பணியிடங்கள் :
மூத்த மேலாளர் - 10 இடங்கள், மேலாளர் - 10 இடங்கள், துணை மேலாளர் - 35 இடங்கள், உதவி மேலாளர் - 35 இடங்கள், மேலாண்மை உதவியாளர் - 50 இடங்கள் என
மொத்தம் 140 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித்தகுதி :
ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில், குறைந்தபட்சம் இளங்கலை பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
மூத்த மேலாளர், மேலாளர் பணிக்கு 35 வயதுக்குட்ப்பட்டவராகவும், துணை மேலாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் 30 வயதுக்கு உட்பட்டவராகவும், உதவி மேலாளர், மேலாண்மை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் 28 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும். மேலும் சிறப்பு பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு சலுகைகள் உண்டு.
சம்பள விகிதம்:
மூத்த மேலாளர் - ஆண்டுக்கு சுமார் ரூ. 8 லட்சம், மேலாளர் - ஆண்டுக்கு ரூ.6.50 லட்சம், துணை மேலாளர் - ஆண்டுக்கு ரூ.5 லட்சம், உதவி மேலாளர் - ஆண்டுக்கு ரூ.4.30 லட்சம், மேலாண்மை உதவியாளர் - ரூ.3.50 லட்சம் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை :
ஆன்லைனில் பதிவேற்றப்படும் விண்ணப்பதாரர்களின் விவரங்கள் சரி பார்க்கப்பட்டு, எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு, நேர்காணல் சென்னையில் மட்டுமே நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment