ODISHA TRAIN ACCIDENT
BREAKING: ஒடிசாவின் பாலாசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில் கவிழ்ந்து கோர விபத்து; பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
வனப்பகுதியில் விபத்து நடந்திருப்பதால் மீட்பு மற்றும் நிவாரணப்பணியில் தாமதம் ஏற்படுவதாக தகவல்..
பயணிகள் விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து, உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை.
ஒடிசாவில் பெரும் ரயில் விபத்து, 30 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் என தகவல்.
500 க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது...
இதுவரை 300 பேர் மருத்துவமனையில் அனுமதி. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது..
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவில் விபத்து; ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு..
தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள் மீட்பு மற்றும் உதவிப்பணிகளுக்காக அமைச்சர் சிவசங்கர் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு நாளை ஒடிசா செல்கின்றனர் .
Comments
Post a Comment