TAMIL NEWS HEADLINES TODAY
108 வயதில் 97 மதிப்பெண் சாதனை
கேரளாவில் தள்ளாத வயதிலும் படிப்பின் மீதான ஆர்வத்தால் தேர்வு எழுதிய மூதாட்டி ஒருவர், 100க்கு 97 மதிப்பெண் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.
நன்றி : THE SEITHIKATHIR | TELEGRAM |
தமிழகத்தின் தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் கமலக்கன்னி, 108. இவர், பல ஆண்டுகளுக்கு முன்பே பிழைப்புக்காக கேரளாவின் இடுக்கி மாவட்டத்தின் வண்டன்மேடு கிராமத்துக்குச் சென்றார். குடும்ப வறுமையின் காரணமாக, இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், இங்குள்ள ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்தார்.
படிக்கவில்லை என்ற ஏக்கத்தில் இருந்த கமலக்கன்னிக்கு, கேரள அரசின் 'சம்பூர்ணா சாக்ஷாத்' என்ற எழுத்தறிவு வகுப்பு வரப்பிரசாதமாக அமைந்தது.
இதில் இணைந்து படிக்கத் துவங்கிய இவர், தமிழும், மலையாளமும் எழுத மற்றும் படிக்க கற்றுக்கொண்டார்.
சமீபத்தில் நடந்த எழுத்துத் தேர்வில், கமலக்கன்னி 100க்கு 97 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.
இவரை பாராட்டி, வண்டன்மேடு பஞ்சாயத்து சார்பில் கேடயம் வழங்கப்பட்டது.
Comments
Post a Comment