SMC MEETING APRIL 2023
SMC MEETING APRIL 2023
பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் ஏப்ரல் 2023
பெருமதிப்பிற்குரிய மாநிலத் திட்ட இயக்குனர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளின்வழி திங்கள்(10/4/23) அன்று நடைபெறவுள்ள பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தை வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி சிறப்பு நிகழ்த்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
மேலும் செயல்முறைகளில் மையப்படுத்தப்பட்டுள்ள
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் , இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களின் 100% வருகையை உறுதி செய்தல்.
வருகைப்பதிவு மற்றும் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை செயலியில் பதிவு செய்தல்
மாணவர் மேம்பாட்டிற்கான பள்ளி ஆசிரியர்கள் மற்றும் இல்லத்தேடிக் கல்வி தன்னார்வலர்களின் கலந்துரையாடலை நிகழ்த்துதல்.
பள்ளி செல்ல குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் கணக்கெடுப்பு மற்றும் அவர்கள் அனைவரது பள்ளிகளில் சேர்க்கையை உறுதி செய்தல்
போக்குவரத்து/பாதுகாவலர் வசதி தொகை விடுவிப்பு போன்ற முக்கிய கூறுகளை முழுமையாக நிறைவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்...
Comments
Post a Comment