பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.01.2023 திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்:இல்லறவியல் அதிகாரம்: செய்நன்றி அறிதல் குறள் : 101 செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. பொருள்: ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது பழமொழி : A light heart lives long. மகிழ்ச்சியான மனமே நீண்ட காலம் வாழ்கிறது. இரண்டொழுக்க பண்புகள் : 1.மின்னணு சாதனங்கள் விட மனிதர்கள் முக்கியம். எனவே உற்றாரோடு நல்ல உறவில் இருக்க முயல்வேன். 2. அனைவரோடும் சிரித்தும் சிந்தித்தும் பேசுவேன் பொன்மொழி : உலகில் செயல்களைச் செய்து காட்டுபவர் சிலர். செய்துகாட்டும் செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர் பலர். என்ன செயல் நடைபெறுகிறது என்று அறியாமலேயே இருப்பவர் அநேகர். பொது அறிவு : 1. நீல் ஆம்ஸ்ட்ராங் எந்த வயதில் நிலாவில் இறங்கினார் ? 68 வது வயதில் . English words & meanings : grease - lubricant, noun. வழு வழுப்பான எண்ணெய் பசை பொருள். பெயர்ச் சொல். Greece - a country, noun. ஒரு நாடு. பெயர்ச் சொல் NMMS Q