TNSED ATTENDANCE NEW APP
TNSED ATTENDANCE NEW APP
TNSED SCHOOLS APP DOWNLOAD LINK
TNSED ATTENDANCE APP MANUAL
02.01.2023 முதல் ஆசிரியர், மாணவர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் வருகையை *'TNSED Attendance'* என்ற புதிய APP ஐ INSTALL செய்து வருகை பதிவு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதற்கான LINK தங்களுக்கு கீழே அனுப்பப்பட்டுள்ளது. *இதனைப் பயன்படுத்தி மட்டுமே தாங்கள் TNSED Attendance ஐ install செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.* ஏனென்றால் *தாங்கள் நேரடியாக play store க்குச்* சென்று install செய்யும்போது
*TNSED Attendance*
மற்றும்
*TNSED Attendance App*
என ஒரே மாதிரியான இரு App கள் இருப்பதை காண முடியும். ஒருவேளை தவறுதலாக *TNSED Attendance App* என்ற தவறான APP ஐ தாங்கள் INSTALL செய்தீர்கள் என்றால் அதில் *Today's Status* இடம் பெற்றிருக்காது.
எனவே *TNSED Attendance* என்ற சரியான APP ஐ INSTALL செய்வதற்கு *கீழே உள்ள LINK ஐ மட்டும் பயன்படுத்தி* INSTALL செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
குறிப்பு: நாம் ஏற்கனவே பயன்படுத்தி வந்த *TNSED Schools* என்ற APP ஐ *ஒரேடியாக UNINSTALL செய்யாமல் LOGOUT செய்து மீண்டும் LOGIN* செய்து வைத்துக் கொள்ளவும். அப்போதுதான் *TNSED Attendance* என்ற APP இல் attendance module நீக்கப்படும். அதேசமயம் வருகையை பதிவுசெய்வதற்கு மட்டும்தான் *TNSED Attendance* என்ற புதிய APP ஐ பயன்படுத்த உள்ளோம். மற்றபடி செய்யக்கூடிய அனைத்து வேலைகளும் *TNSED Schools* என்ற பழைய APP இன் மூலம் மட்டுமே செய்ய வேண்டி உள்ளது என்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.
அனைத்து வகை அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் உடனடியாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள APP ஐ INSTALL செய்து வருகை பதிவு செய்து பார்ப்பதின் மூலம் புதிய APP இல் கொடுக்கப்பட்டுள்ள அம்சங்களை நன்கு அறிந்து 02.01.2023 அன்று முதல் சரியான முறையில் குறித்த நேரத்தில் தவறாமல் வருகை பதிவு மேற்கொள்ள முடியும்.
வரும் 01.01.2023 வரை தாங்கள் *TNSED Attendance* என்ற புதிய APP இல் ஒத்திகை பார்க்கக்கூடிய தகவல்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
*TNSED Attendance இன் சிறப்புகள்:*
1. Today's Status இல் default ஆக fully working என இருக்கும். Partially working, fully not working என தேவைப்படுபவர்கள் மாற்றிக் கொள்ளலாம்.
2. ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் வருகையை காலை மற்றும் மாலை என இருவேளை தனித்தனியாக குறிக்க முடியும். காலை நேரத்திற்குரிய வருகை பதிவு செய்தால் மட்டுமே மாலை நேரத்திற்குரிய வருகையை பதிவு செய்ய இயலும். ( P - PRESENT, A - ABSENT, OD - ON DUTY, TR - TRAINING, DT - DEPUTATION, PR - PERMISSION, NA - NOT APPLICABLE).
3. ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அரை நாள் விடுப்பு எடுப்பதை குறிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
4. மாற்றுத்திறனாளி மாணவர்களின் வருகையை குறிப்பதற்கு P - PRESENT, A - ABSENT, H - HOME BASED மற்றும் I - IE NRSTC என உள்ளீடுகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
5. பள்ளிக்கு வருகை புரிந்த மற்றும் வருகை புரியாத ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் விவரங்களை SCHOOL LOGIN இல் எளிதாக அறிந்து கொள்ள இயலும்.
6. வருகை பதிவு குறிக்கப்பட்ட மற்றும் குறிக்கப்படாத பிரிவுகள் எத்தனை என்ற விவரத்தை தலைமையாசிரியர் எளிதில் அறிந்து கொள்ள இயலும்.
7. Overall Marking Status ஐ பார்ப்பதன் மூலம் எத்தனை வகுப்புகளுக்கு முழுமையாக குறிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை அன்றைய தினத்திற்குரிய தேதியுடன் அறிந்து கொள்ள இயலும்.
8. வருகை பதிவு செய்யும்போது INTERNET வசதி தேவை என்ற அவசியம் இல்லை. OFFLINE இல் பதிவு செய்ய இயலும்.
9. Auto synchronisation வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாம் SYNCHRONIZE செய்ய வேண்டிய அவசியம் இல்லை. INTERNET வசதி நன்றாக இருக்கக்கூடிய இடத்திற்கு அன்றைய தினத்தில் செல்லும்போது தானாகவே SYNCHRONIZE ஆகிவிடும்.
10. வருகை பதிவு செய்த மற்றும் செய்யாத பள்ளிகளின் விவரம் சார்ந்த தகவல்கள் அன்றைய தினமே block மற்றும் district login இல் வழங்கப்பட உள்ளது.
11. IFHRMS உடன் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் வருகை சார்ந்த விவரம் விரைவில் இணைக்கப்பட உள்ளது.
12. பெருமழை போன்ற இடர்பாடு காலங்களில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும்போது பள்ளி செயல்படவில்லை என்ற விவரத்தை DISTRICT LOGIN இல் பதிவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தங்களுக்கு சந்தேகங்கள் இருப்பின் தங்களது ஆசிரியர் பயிற்றுநரை விரைந்து தொடர்புகொண்டு தெளிவுபெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஏனென்றால் பள்ளி திறக்கும் முதல்நாள் (02.01.2023) முதல் அனைத்து பள்ளிகளும் தவறாமல் புதிய செயலி *(TNSED Attendance)* வழியாக வருகை பதிவு செய்ய வேண்டும் என மதிப்புமிகு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment