TAMILNADU WEATHER UPDATE வருகிறது மாண்டஸ் புயல்
வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழத்த தாழ்வு மண்டலம் மாண்டஸ் புயலாக இன்று மாலை வலுப்பெறுகிறது..
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் 8 மற்றும் 9ஆம் தேதி அதிகனமழை பெய்யும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அறிவிப்பு.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு!
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது;
சென்னைக்கு தென் கிழக்கே 830 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை புயலாக வலுப்பெறும்.
-இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நாளை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு
கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
புயல், மழையால் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு உதவுவதற்கும், மீட்பு பணியில் ஈடுபடுவதற்கும் காவல் துறையினர் தயார் நிலையில் இருக்கும்படி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு.
Comments
Post a Comment