SCHOOL MORNING PRAYER ACTVITIES 08 NOV 2022
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.11.2022
திருக்குறள் :
பால்: அறத்துப்பால்,
அதிகாரம்: அறன் வலியுறுத்தல்,
குறள் :34,
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
விளக்கம்:
ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.
பழமொழி :
It is most blessed to give than to receive.
ஏற்பதைவிட இடுவது சிறப்பு.
இரண்டொழுக்க பண்புகள் :
1. அன்பையும் மரியாதையும் பிறருக்கு தயங்காமல் கொடுப்பேன்
2. மகிழ்ச்சி என்னும் பெரிய பழத்தை விட நம்பிக்கை என்னும் சிறிய விதை பெரிதாக வளர்ந்து அநேக பழங்கள் கொடுக்கும் எனவே நம்பிக்கை விதை செல்லுமிடமெல்லாம் விதைப்பேன்
பொன்மொழி :
ரோஜாவுக்காக நீங்கள் செலவழித்த நேரமே உங்கள் ரோஜாவை மிகவும் முக்கியமானதாக ஆக்குகிறது. --அந்துவான் து செயிந் தெகுபெறி
பொது அறிவு :
1. உடம்பில் உள்ள எலும்புகளில் மிக நீளமானது எது?
தொடை எலும்பு .
2.காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதல் முதலில் வெளியிட்ட நாடு எது ?
போலந்து.
English words & meanings :
Trichology - study of hair and it's disorders. Noun. முடி மற்றும அதன் தன்மைகள் குறித்த படிப்பு
NMMS Q :
சமணப் பேரவை முதன் முதலில் எங்கு கூடி தங்களின் சமய போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்க முற்பட்டனர்?
விடை: பாடலிபுத்திரம்
நவம்பர் 08
வீரமாமுனிவர் அவர்களின் பிறந்தநாள்
இன்றைய செய்திகள்
08.11.22
* தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14-ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6-ம் தேதியும் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.
* கூட்டுறவுச் சங்கங்களின் வரலாற்றில் முதல் முறையாக 10 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுச் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இந்தாண்டின் இறுதி சந்திர கிரகணம் இன்று நடைபெற உள்ளது. கொல்கத்தா, சென்னை உட்பட கிழக்கு பகுதிகளில் மட்டும் சந்திரன் உதயத்தின்போது கிழக்கு தொடுவானில் கிரகணத்தின் இறுதி நிலைகளை காணலாம்.
* சிறு வியாபாரிகள் தங்கள் பொருட்களை ஆன்லைன் மூலம் விளம்பரப்படுத்தி விற்பதற்கு வசதியாக, மத்திய அரசு ‘ஓஎன்டிசி’ என்ற டிஜிட்டல் நெட்வொர்க் தளத்தை அறிமுகம் செய்துள்ளது.
* பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
* ஐ.நா. பொதுச் சபையில் நாஜி கொள்கைக்கு எதிராக ரஷ்யா கொண்டுவந்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளித்தது. 106 நாடுகளின் ஆதரவுடன் ரஷ்யாவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு இழப்பீடு வழங்க காப் குழுவில் இடம்பெற்றுள்ள 194 நாடுகளும் ஒப்புக்கொண்டன.
* 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: குரூப் 1ல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2ல் இருந்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
* ஆசிய குத்துச்சண்டை: இந்திய வீரர் ஷிவ தபா அரைஇறுதிக்கு முன்னேற்றம்.
* எப்.ஐ.எச் புரோ லீக் ஆக்கி: ஸ்பெயினை வீழ்த்தி இந்தியா வெற்றி.
Comments
Post a Comment