SCHOOL MORNING PRAYER ACTIVITIES
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.11.2022
திருக்குறள் :
பால்:அறத்துப்பால்
இயல்:பாயிரவியல்
அதிகாரம்: இல்வாழ்க்கை
குறள் : 50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
பொருள்:
தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.
பழமொழி :
Nothing so bad but it might have been worse.
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று.
இரண்டொழுக்க பண்புகள் :
1. நான் பிறருக்கு வலது கையால் செய்யும் உதவி இடது கைக்கு கூட தெரியாமல் செய்வேன்.
2. உதவி பிறரின் வருத்தம் போக்க, பிறர் என்னை புகழ அல்ல
பொன்மொழி :
உங்களிடம் உள்ள மிகவும் விலைமதிப்பற்ற வளம் நேரமாகும். --ஸ்டீவ் ஜாப்ஸ்
பொது அறிவு :
1. முதல் உலகப்போர் நடந்த ஆண்டு எது ?
1914 ஆம் ஆண்டு .
2. உலக சமாதான சின்னம் எது ?
ஒலிவ் மரத்தின் கிளை.
English words & meanings :
ate -past tense of eat, verb. சாப்பிட்டு விட்டேன். வினைச் சொல். eight - number 8. noun எண் எட்டு. பெயர்ச் சொல்.both homonyms.
NMMS Q
0.04, 0.09, 0.25, 0.49, ________
விடை: 0.121
விளக்கம்- பகா எண்களின் தொடர்ச்சி மற்றும் அதன் வர்க்கமாக உள்ளது.
நவம்பர் 21
சர் சந்திரசேகர வெங்கட ராமன் அவர்களின் நினைவுநாள்
இன்றைய செய்திகள்
21.11.22
* பல மின்இணைப்பு வைத்துள்ளவர்கள் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம்: மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்.
* சென்னை உள்ளிட்ட 7 மண்டலங்களில் டிச.23-ல் தர்ணா: அரசுப் பணியாளர் சங்கம் அறிவிப்பு.
* தமிழ்நாடு அரசு சார்பில் நடந்து வரும் அகழ்வாய்வுகள் வரலாற்றுக்கு புதிய தரவுகளையும், தகவல்களையும் தெரிவித்து வருகின்றன என தொல்பொருள் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
* பாரதியார் பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாக அறிவிக்கிறது மத்திய அரசு: வாரணாசியில் பாரதி நினைவிட பணியையும் மேற்கொள்ள திட்டம்.
* டிசம்பர் 7-ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
* ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக சேர்க்க இந்தியாவுக்கு பிரான்ஸ் ஆதரவு.
* 2வது டி20 போட்டி - நியூசிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.
* சர்வதேச டி20 கிரிக்கெட்: ஒரே போட்டியில் பல சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்.
* 32 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது...
Comments
Post a Comment