SCHOOL MORNING PRAYER ACTIVITIES
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.11.2022
திருக்குறள் :
பால்: அறத்துப்பால்.
அதிகாரம்: இல்வாழ்க்கை:
குறள்:
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
விளக்கம்:
துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.
பழமொழி :
Do your duty and then ask for your rights
கடமையை செய்து பின்பு உரிமையைக் கேள்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. எந்த காரியம் என்றாலும் கடவுள் மற்றும் மன சாட்சிக்கு பயந்து செய்வேன்.
2. மனிதர்கள் என்னை பார்க்க வேண்டும் என்று செய்ய மாட்டேன்.
பொன்மொழி :
நாம் நேரத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும், ஊன்றுகோலாக அல்ல. --ஜான் எஃப். கென்னடி.
பொது அறிவு :
1. விசைத்தறியை கண்டுபிடித்தவர் யார் ?
இ .கார்ட்ரைட்.
2. உலகிலேயே மிகப்பெரிய பெருங்கடல் எது?
பசிபிக் பெருங்கடல் .(ஆழம் 12 ,925 அடி).
English words & meanings :
ba-nd -a ring noun மோதிரம்,ba-nd -a group noun குழு, ba-nned- prohibited. verb தடை செய்யப்பட்டது. all homophones
NMMS Q
பாமினி அரசில் சிறந்த மொழி அறிஞராகவும், கவிஞராகவும் விளங்கியவர் யார்?
விடை: சுல்தான் பிரோஸ்
நவம்பர் 17
லாலா லஜபதி ராய் அவர்களின் நினைவுநாள்
இன்றைய செய்திகள்
17.11.22
* மருத்துவ மேற்படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களின், வெளிநாடு வாழ் இந்தியருக்கான சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என மருத்துவப் படிப்பு தேர்வுக் குழுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை காலநிலை மாற்ற எதிர்வுணர்வு திட்டம் 920 கோடி செலவில் செயல்படுத்தபட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
* ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளன.
* தமிழகத்தில் 19-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழையும், இம்மாதம் 20-ம் தேதியன்று 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* தென்பெண்ணை நதிநீர் பங்கீடு நடுவர் மன்றம் 4 வாரங்களில் அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
* ‘நிலவையும் தாண்டி’ - விண்ணில் பாய்ந்தது நாசாவின் ஆர்ட்டெமிஸ் ராக்கெட்.
* ஜி-20 கூட்டமைப்பின் புதிய தலைமைப் பொறுப்பு இந்தியா வசம் ஒப்படைப்பு.
* இந்தோனேசியாவின் பாலி தீவில் ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அங்கு சென்றுள்ள உலக நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக பாலி தீவில் உள்ள மாங்குரோவ் எனப்படும் அலையாத்திக் காடுகளைப் பார்வையிட்டனர்.
* சென்னை ஹாக்கி சங்கம் சார்பில் முதலாவது டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் தமிழ்நாடு தபால் துறை, ரிசர்வ் வங்கி, அசோக் லேலண்ட், தமிழ்நாடு மின்சார வாரியம், ஏர் இந்தியா, எம்.சி.சி., செயின்ட் பால்ஸ் உள்பட 34 அணிகள் கலந்து கொள்கின்றன.
* டி20 தரவரிசையில் முதல் இடத்தை தக்கவைத்த சூர்யகுமார்: சாம் கரன், ஹேல்ஸ் முன்னேற்றம்.
* புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்- பாட்னா பைரேட்ஸ் ஆட்டம் 'டை'.
Comments
Post a Comment