SCHOOL MORNING PRAYER ACTIVITIES 22 NOV 2022
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.11.2022
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:இல்லறவியல்
அதிகாரம்:வாழ்க்கைத் துணை நலம்
குறள் : 57
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
பொருள்:
தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.
பழமொழி :
when you obey the superior, you instruct your inferior
முன் ஏர் போன வழியேதான் பின் ஏறும் போகும்
இரண்டொழுக்க பண்புகள் :
1. நான் பிறருக்கு வலது கையால் செய்யும் உதவி இடது கைக்கு கூட தெரியாமல் செய்வேன்.
2. உதவி பிறரின் வருத்தம் போக்க, பிறர் என்னை புகழ அல்ல
பொன்மொழி :
"நேரம் என்பது ஒரு சிறந்த எழுத்தாளர். அது எப்போதும் சரியான முடிவை எழுதுகிறது. --சார்லி சாப்ளின்
பொது அறிவு :
1. நிலவில் ஏற்றப்பட்ட முதல் கொடி எந்த நாட்டினுடையது?
ரஷ்யா.
2. உலகிலேயே அதிகமாக வெயில் அடிக்கும் இடம் எது?
கிழக்கு சகாரா பாலைவனம்.
English words & meanings :
ate -past tense of eat, verb. சாப்பிட்டு விட்டேன். வினைச் சொல். eight - number 8. noun எண் எட்டு. பெயர்ச் சொல்.both homonyms.
NMMS Q
6, 13, _______, 33.
விடை : 22.
விளக்கம்: 6+3 =9 ; 13+3 = 16; 33+3 = 36; மூன்றின் வர்க்கம் 9. 4 வர்க்கம் 16. 6ன் வர்க்கம் 36 என வந்துள்ளது. எனவே இடையில் உள்ள எண்ணானது ஐந்தின் வர்க்கமாக அமையும். ஆகையால் 25ல் மூன்றை கழித்தால் 22 கிடைக்கிறது.
இன்றைய செய்திகள்
22.11.22
* தமிழக அரசின் மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு.
* அரசு கேபிள் டிவி பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் உதவிக்கு துணை மேலாளர்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
* தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு 4000 முதல் 4500 பேருக்கு 'மெட்ராஸ் ஐ' பாதிப்பு.
* தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* ரூ.22,842 கோடி வங்கி மோசடி: ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்.
* இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிகடர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 44 பேர் பலியானதாகவும், 300 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
* 2030-க்குள் மனிதர்கள் நிலவில் வாழலாம், பணி செய்யலாம் என நாசா தெரிவித்துள்ளது.
* ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் - சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்.
* இந்திய கால்பந்து கிளப்கள் மீது சூதாட்ட புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சிபிஐ விசாரணை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
* விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர்: உலக சாதனை படைத்தது தமிழ்நாடு அணி.
Comments
Post a Comment