SCHOOL MORNING PRAYER ACTIVITIES 14 NOV 2022
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.11.2022
திருக்குறள்
பால்: அறத்துப்பால்
அதிகாரம்:அறன் வலியுறுத்தல்
குறள் 39:
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
விளக்கம்: அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.
பழமொழி :
"A light heart lives long.
மகிழ்ச்சியான மனமே நீண்ட காலம் வாழ்கிறது."
இரண்டொழுக்க பண்பாடு
.1. எந்த காரியம் என்றாலும் கடவுள் மற்றும் மன சாட்சிக்கு பயந்து செய்வேன். 2. மனிதர்கள் என்னை பார்க்க வேண்டும் என்று செய்ய மாட்டேன்.
பொன்மொழி
"உங்கள் 24 மணிநேரத்தை மாற்றினால், நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றுவீர்கள். --எரிக் தாமஸ்
பொது அறிவு
1. எந்த உலோகத்தின் உப்புகள் சூரிய ஒளியால் பாதிக்கப்படுகின்றன ?
வெள்ளி .
2.விண்வெளிக்கு முதல் முதலில் சென்ற பெண் நாயின் பெயர் என்ன ?
லைகா.
English words - meanings
Zoo pathology - study of animal diseases. Noun. விலங்குகள் நோய் குறித்த படிப்பு .
NMMS
__________டச்சுக்காரர்களின் தலைநகராக இருந்தது.
விடை :பழவேற்காடு
செய்திகள் :
* திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை மற்றும் குப்பனத்தம் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் தென்பெண்ணையாறு மற்றும் செய்யாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
* மயிலாடுதுறை மாவட்டத்தில் 16 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், 45,826 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
* தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* ஒரே நாளில் 108 இடங்களில் கனமழை பெய்தது - புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி 16-ம் தேதி உருவாகிறது.
* மாநில கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை 6 மாதங்களில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
* 2-வது முறை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் உயிரிழக்கும் ஆபத்து - ‘நேச்சர் மெடிசின்’ இதழில் ஆய்வுத் தகவல்.
* ஆஸ்திரேலியாவில் கடந்த ஒரு வாரமாக ஒமைக்ரான் எக்ஸ்பிபி வகை கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இது 4-வது அலை என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் ஆஸ்திரேலிய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
* பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 2-வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது இங்கிலாந்து.
* 2024 -2027 ஆம் ஆண்டுக்கு இடையில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டியை நடத்தும் நாடுகள் குறித்து ஐசிசி அட்டவணை வெளியிட்டுள்ளது.
* ஆசிய குத்துச்சண்டை: இந்திய வீரர் ஷிவ தபாவுக்கு வெள்ளிப்பதக்கம்.
Comments
Post a Comment