SCHOOL MORNING PRAYER ACTIVITIES 10 NOV 2022
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.11.2022
திருக்குறள் :
பால்:அறத்துப்பால்
இயல்:பாயிரவியல்
அதிகாரம்:அறன் வலியுறுத்தல்
குறள் : 36
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
பொருள்:
பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்
பழமொழி :
Better do a thing than wish it to be done.
தன் செயலைத் தானே செய்தல் அழகு.
இரண்டொழுக்க பண்புகள் :
1. அன்பையும் மரியாதையும் பிறருக்கு தயங்காமல் கொடுப்பேன்
2. மகிழ்ச்சி என்னும் பெரிய பழத்தை விட நம்பிக்கை என்னும் சிறிய விதை பெரிதாக வளர்ந்து அநேக பழங்கள் கொடுக்கும் எனவே நம்பிக்கை விதை செல்லுமிடமெல்லாம் விதைப்பேன்.
பொன்மொழி :
நேரம் என்பது ஒரு மாயை. --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
பொது அறிவு :
1. ஷட்டில் காக் விளையாட்டில் பயன்படுத்தும் பந்துகளில் எந்தப் பறவையின் இறகுகள் பயன்படுத்தப்படுகின்றன?
வாத்து இறகு.
2. ஐஸ் கட்டிகளை தெர்மாகோலில் வைப்பது ஏன்?
தெர்மாகோல் வெப்பத்தையும் குளிரையும் அரிதில் கடத்தி.
English words & meanings :
Vitrics - study of glass materials. Noun. கண்ணாடி பொருட்கள் குறித்த அறிவியல்
NMMS Q :
சமணத்தின் தொடக்க காலத்தில் சமணத்துறவிகள் சமணத்தின் ___________உறுதிமொழிகளைக் கடுமையாக பின்பற்றினர்.
விடை : ஐந்து
இன்றைய செய்திகள்
10.11.22
* மேட்டூர் அணை உபரி நீரை ஏரி, குளங்களுக்கு திருப்பிவிட கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.
* சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஒருநாளின் உச்சப்பட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின்கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
* கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தமிழக மருத்துவத் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
* தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
* குரூப் 2 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சியின் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.
* நேபாள நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 6 பேர் பலியாகினர். நிலநடுக்கத்தின் எதிரொலியாக இந்தியாவில் தலைநகர் டெல்லி, வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நில அதிர்வு உணரப்பட்டது.
* மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மிக மோசமாக காற்று மாசுபாடு நிலவும் நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பிஹார் மாநிலத்தின் கதிஹார் முதல் இடத்தில் உள்ளது.
* இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
* தைவானுடன் தொடரும் பதற்றம்: போருக்குத் தயாராக ராணுவத்துக்கு சீன அதிபர் உத்தரவு.
* ஐபிஎல் 2023 தொடருக்கான மினி ஏலம் நடைபெறும் தேதி, இடம் அறிவிப்பு.
* ஐசிசி டி20 தரவரிசை: பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் சூர்யகுமார் முதல் இடத்தை தக்கவைத்துள்ளார்.
* பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இரட்டையர் பிரிவில் ரஷியா-பெல்ஜியம் ஜோடி சாம்பியன்.
Comments
Post a Comment