SCHOOL MORNING PRAYER ACTIVITIES 07 NOV 2022
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.11.2022
திருக்குறள் :
பால்:அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம் :அறன் வலியுறுத்தல்
குறள் : 33
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
பொருள்:
செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.
பழமொழி :
The secret of success is the consistency of purpose.
நோக்கத்தின் உறுதியே வெற்றியின் ரகசியம்
இரண்டொழுக்க பண்புகள் :
1. அன்பையும் மரியாதையும் பிறருக்கு தயங்காமல் கொடுப்பேன்
2. மகிழ்ச்சி என்னும் பெரிய பழத்தை விட நம்பிக்கை என்னும் சிறிய விதை பெரிதாக வளர்ந்து அநேக பழங்கள் கொடுக்கும் எனவே நம்பிக்கை விதை செல்லுமிடமெல்லாம் விதைப்பேன்
பொன்மொழி :
ஒரு மனிதனால் செலவிடக்கூடிய மிகவும் மதிப்புமிக்க விடயம் நேரம். --தியோபிராஸ்டஸ்
பொது அறிவு :
1. ஆயிரம் ஏரிகளின் பூமி என்று அழைக்கப்படுவது?
பின்லாந்து.
2.இந்தியாவின் நீல மலைகள் என்று அழைக்கப்படுவது எது?
நீலகிரி குன்றுகள்.
English words & meanings :
Silvics - study of tree's life. Noun. மரங்கள் வாழ்வு குறித்த அறிவியல் படிப்பு
NMMS Q :
இளகும் நெகிழி என்பது__________ஆகும்.
விடை: பாலி எத்திலீன்
நவம்பர் 07
மேரி க்யூரி அவர்களின் பிறந்தநாள்
சி.வி.இராமன் அவர்களின் பிறந்தநாள்
அழ. வள்ளியப்பா அவர்களின் பிறந்தநாள்
இன்றைய செய்திகள்
07.11.22
* தமிழகத்தில் பள்ளிக் கட்டிடங்கள் எங்கெல்லாம் பழுதடைந்து உள்ளதோ, அவற்றையெல்லாம் இடித்துவிட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
* தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் எனவும், 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன்பாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு மீண்டும் திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்க தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
* சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிர்களை இம்ம்மாதம் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என்று தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை தெரிவித்துள்ளது.
* ஹைதராபாத், டெல்லி, பெங்களூருவில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் வீடு வாங்க முன்னுரிமை.
* டான்சானியாவில் ஏரியில் விழுந்து நொறுங்கிய விமானம்: 20 பயணிகள் மீட்பு; பலர் மாயம்.
* டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா அபாரவெற்றி.
* ஆசிய குத்து சண்டை சாம்பியன்ஷிப்: 5 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா.
* பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் மரியா சக்காரி, சபலென்கா தங்கள் பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறினர்.
Comments
Post a Comment