SCHOOL MORNING PRAYER ACTIVITIES 04 NOV 2022
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.11.2022
திருக்குறள் :
பால்: அறத்துப்பால்,
அதிகாரம் :அறன் வலியுறுத்தல்,
குறள் :32
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
விளக்கம்:
ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை
பழமொழி :
All art is but imitation of nature.
அனைத்து கலைகளும் இயற்கையின் பிரதிபலிப்பாகும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. சூரியன், மழை, மரம், ஆறு எதுவும் தனக்கென இருப்பதில்லை. அவைகளின் கனி, நீர், ஒளி, வெப்பம் அனைத்தும் பிற உயிர்களுக்கே.
2. இயற்கையை போலவே நானும் தன்னலமின்றி வாழ முயல்வேன்.
பொன்மொழி :
பொறுமையும் நேரமும் இரண்டு மிகவும் சக்திவாய்ந்த போர்வீரர்கள். --லியோ டால்ஸ்டாய்
பொது அறிவு :
1. மத்திய தரை கடலின் திறவுகோல் என்று அழைக்கப்படுவது எது ?
ஜிப்ரால்டர்.
2. ரோஸ் பிங்க் நகரம் என்று அழைக்கப்படுவது எது?
ஜெய்ப்பூர்.
English words & meanings :
Radiology - study of x-ray and it's medical applications. Noun. ஊடுகதிர் அல்லது எக்ஸ்ரே குறித்த மருத்துவ படிப்பு
NMMS Q :
இரண்டாம் உலகப்போரின் போது பாராசூட்டுகளுக்கு கயிறாக பயன்படுத்தப்பட்ட செயற்கை இழை ______________ஆகும்.
விடை: நைலான்
இன்றைய செய்திகள்
04.11.22
* சென்னை - அண்ணா நகரில் 30 நிமிடத்தில் 4.5 செ.மீ மழை பதிவாகி உள்ளது. குறிப்பாக, 10 நிமிடத்தில் 2 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
* பருவமழையின்போது எவ்வித தடையும் இல்லாமல் சீராக மின்விநியோகம் செய்வதற்காக தமிழகம் முழுவதும் 11 ஆயிரம்ஊழியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
* தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
* வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு: 55 சதவீதம் பேரின் விவரங்கள் சேகரிப்பு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்.
* 5 ஆயிரம் கி.மீ. தூரத்தில் இருந்து ஏவப்படும் எதிரி ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் AD-1 ஏவுகணை சோதனை, ஒடிசா கடற்பகுதியில் நேற்று நடத்தப்பட்டு, சோதனை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
* சவுதி அரேபியாவின் எரிசக்தி உற்பத்தி மையங்களில் ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
* டி20 உலகக் கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி.
* ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடர்: பிரக்ஞானந்தா, நந்திதாவுக்கு தங்கம்.
* உலக இளையோர் டேபிள் டென்னிஸ்: தமிழக வீரர் பாலமுருகன் 2 பதக்கங்களை வென்றுள்ளார்.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Comments
Post a Comment