RAIN FORECAST TODAY 12 NOV 2022
இன்றைய வானிலை செய்திகள்
12 நவம்பர் 2022
Video : Thanthi tv / YouTube
வங்கக்கடலில் தொடர்ந்து நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!
தமிழகத்தில் இன்றும் அதிகனமழைக்கு வாய்ப்பு
16ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்ப பெறப்பட்டது.
சீர்காழி, மயிலாடுதுறை, சிதம்பரம் ஆகிய டெல்டா பகுதியில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்து வருகிறது
டெல்டாவில் வெளுத்து வாங்கிய கனமழை (நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மழையளவு):
சீர்காழியில் கடந்த 24 மணி நேரத்தில் 43.6 செ.மீ. மழை பொழிவு.
கொள்ளிடத்தில் 31.5 செ.மீ., சிதம்பரத்தில் 30.7 செ.மீ., மழை பதிவு
செம்பனார்கோயில் -24.2 செ.மீ, பொறையார் - 18.3 செ.மீ, மயிலாடுதுறை - 16 செ.மீ மழை பதிவு.
டெல்டா மாவட்டங்களில் நேற்றிரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை
சம்பா பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் - விவசாயிகள் அச்சம்
மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.
தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்!
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வட தமிழகத்தை நோக்கி நகர்வதால் டெல்டா, உள் தமிழக மாவட்டங்களில் மழையின் தீவிரம் குறைய வாய்ப்பு
-இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
என்ன சொல்கிறார் வெதர்மேன்...
Comments
Post a Comment