MORNING PRAYER ACTIVITIES 25 NOV 2022
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.11.2022
திருக்குறள் :
பால் : அறத்துப்பால்,
அதிகாரம் - மக்கட் பேறு:
குறள்:62 -
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
விளக்கம்:
பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா
பழமொழி :
Aspiring people are inspiring people.
ஆர்வம் உடையோரே ஆர்வத்தை தூண்ட முடியும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. நான் பிறருக்கு வலது கையால் செய்யும் உதவி இடது கைக்கு கூட தெரியாமல் செய்வேன்.
2. உதவி பிறரின் வருத்தம் போக்க, பிறர் என்னை புகழ அல்ல
பொன்மொழி :
வேலை செய்வதற்கு ஏற்ற மிகவும் அமைதியான நேரம் இரவு. இது சிந்தனைக்குத் துணைபுரிகிறது. --அலெக்சாண்டர் கிரஹாம் பெல்
பொது அறிவு :
1. ஐந்து நதிகள் ஓடும் இந்திய மாநிலம் எது ?
பஞ்சாப்.
2. ஆசியா கண்டத்தின் மிகப்பெரிய நகரம் எது?
டோக்கியோ.
English words & meanings :
bail -to clear water. நீரை வெளியேற்றுவது. verb. bail -temporary release of the prisoner. பிணை. transitive verb. வினைச் சொல். both homonyms
NMMS Q
உலோக பண்புகளையும் அலோக பண்புகளையும் பெற்ற தனிமங்கள் ---- என்று அழைக்கப்படுகின்றன.
விடை - உலோகப் போலிகள்
நவம்பர் 25
இன்றைய செய்திகள்
23.11.22
* மதுரை மாவட்டத்தில், அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராமங்களிலுள்ள 193.215 ஹெக்டேர் பரப்பிலான பகுதியை அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரியத் தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மாநிலத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாகும்.
* மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே இணையதளத்தில் மின்கட்டணம் செலுத்த முடியும் என்பதால் மின் நுகர்வோர் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
* அரசு மருத்துவமனைகளில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
* ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு, இந்த மாதம் முதல் வாரம் 3 முட்டை, சத்துமாவு மற்றும் செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்கள் வழங்குவதற்கான அரசாணை வெளியிப்பட்டுள்ளது.
* அரசு உத்தரவிட்டால் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெறும் பணியை முடிக்க ராணுவம் தயாராக இருக்கிறது என்று வடக்கு மண்டல ராணுவத் தளபதி லெப். ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
* நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் உணவு மானியம் ரூ.3 லட்சம் கோடியைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
* இந்தோனேசியா நிலநடுக்கம்: பலி 252 ஆக அதிகரிப்பு; நிவாரண முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் தஞ்சம்.
* இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 கணக்கில் முழுமையாக கைப்பற்றி உள்ளது.
* 2024 டி20 உலகக்கோப்பை தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
* கராத்தே 1 சீரியஸ் ஏ பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார் பிரனாய் சர்மா
Comments
Post a Comment