SCHOOL MORNING PRAYER ACTIVITIES 31 OCT 2022
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.10.2022
திருக்குறள் :
பால் : அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: நீத்தார் பெருமை
குறள் : 28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.
பழமொழி :
A double charge will break even a cannon
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
இரண்டொழுக்க பண்புகள் :
1. சூரியன், மழை, மரம், ஆறு எதுவும் தனக்கென இருப்பதில்லை. அவைகளின் கனி, நீர், ஒளி, வெப்பம் அனைத்தும் பிற உயிர்களுக்கே.
2. இயற்கையை போலவே நானும் தன்னலமின்றி வாழ முயல்வேன்.
பொன்மொழி :
தம்மால் வெல்ல முடியும் என்று நம்புகிறவர்கள் தான் வெற்றிகளைக் குவிப்பார்கள்.
பொது அறிவு :
1.காமராஜர் எப்போது முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார்?
1963ஆம் ஆண்டு.
2. வண்டல் மண் எதன் படிவுகளால் ஏற்படுகிறது ?
ஆறுகள்.
English words & meanings :
Neo-na-to-lo-gy - study of new born babies. Noun. பிறந்த குழந்தைகள் குறித்த மருத்துவ அறிவியல்.
அக்டோபர் 31
இந்திரா காந்தி அவர்களின் நினைவுநாள்
இன்றைய செய்திகள்
31.10.22
* தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்லில் 45 குழுக்கள் கண்காணிப்பு.
* உள்ளாட்சி அமைப்புகளின் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் ஒதுக்கீட்டை முறைப்படுத்த நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
* பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு குழு: குஜராத் அமைச்சரவை ஒப்புதல்.
* சோமாலியா தலைநகரில் குண்டுவெடிப்பு - நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
* சவுதி அரேபியாவில் பொறியாளராகப் பணிபுரிய விரும்பும் இந்தியர்கள் அதற்கான அங்கீகாரச் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்று ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.
* உலக ஜூனியர் பேட்மிண்டன்: தமிழக வீரர் சங்கர் முத்துசாமி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.
* தேசிய கைப்பந்து போட்டி - தமிழக பெண்கள் அணி சாம்பியன்.
* சர்வதேச ஜூனியர் ஹாக்கி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி 'சாம்பியன்' பட்டம் வென்றது.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Comments
Post a Comment