TODAY NEWS HEADLINES 26 OCT 2022
இன்றைய செய்தி மாலை
( 26 அக்டோபர் 2022)
கல்விச் செய்தி
வரும் 29 ந் தேதி ஆசிரியர்களுக்கு குறுவள மைய பயிற்சி
-----------------------------------------------------------------
GPF மீதான வட்டி விகிதம் 01.10.2022 முதல் 31.12.2022 வரையிலான காலத்திற்கு 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!!!
-----------------------------------------------------------------
*தமிழக அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் இன்று அமலுக்கு வந்தது.*
*விதிகளை மீறுவோரிடம் நிர்ணயிக்கப்பட்ட அபராதத் தொகை வசூலிக்கப்படும் என சென்னை காவல்துறை தகவல்.*
*செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதன்முறை ஆயிரம் ரூபாய்; இரண்டாவது முறை 10 ஆயிரம் ரூபாய் அபராதம்.*
*ஹெல்மேட், சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம்.*
*சிக்னலை மீறுபவர்களுக்கு முதன்முறை 500 ரூபாயும், 2-அது முறை 1,500 ரூபாயும் அபராதம்.*
*புதிய சட்டத்தின் படி போதையில் வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அபராதம்.*
*************
*காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையை தரம் உயர்த்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.*
*290 படுக்கை வசதிகளுடன் இயங்கிவரும் மருத்துவமனையை 750 படுக்கை வசதியுள்ளதாக மேம்படுத்த திட்டம்.*
*உலகவங்கி, தேசிய சுகாதார இயக்கத்தின் நிதி உதவியுடன் மருத்துவமனை தரம் உயர்த்தப்படவுள்ளது.*
***********
*டவ் ஷாம்பை திரும்ப பெற யுனிலீவர் நிறுவனம் முடிவு:*
*Dry டவ் ஷாம்புவில் அதிகளவு உள்ள பென்சின் என்ற ரசாயனம், ரத்த புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.*
*இதனால், அமெரிக்காவில் டவ் ஷாம்பை திரும்ப பெற யுனிலீவர் நிறுவனம் முடிவு.*
*அக்டோபருக்கு முன்பு தயாரித்த ஷாம்புக்கள் மட்டும் திரும்ப பெற முடிவு செய்துள்ளது*
Comments
Post a Comment