SCHOOL MORNING PRAYER ACTIVITIES 28.09.2022
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.09.2022
திருக்குறள் :
பால்: அறத்துப்பால்
அதிகாரம்/Chapter: கடவுள் வாழ்த்து / The Praise of God
குறள் 5:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
விளக்கம்:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
பழமொழி :
Many hands make light work.
பல கரங்கள் பணியை இலகுவாக்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. நான் வலது கையால் செய்யும் உதவி என் இடது கைக்கு கூட தெரிய கூடாது.
2. பிறருக்கு தெரியும் படி செய்தால் அது உதவி அல்ல விளம்பரம். கடவுளுக்கு பிரியம் இருக்காது .
பொன்மொழி :
நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்புகளை முறையாகப் பெற்றிருக்க வேண்டும்.
பொது அறிவு :
1. விமானப்படை நாள் எது?
அக்டோபர் 8.
2. உலகில் கடற்கரையே இல்லாத நாடுகள் எத்தனை?
26.
English words & meanings :
wind·shield - . A shield placed to protect an object from the wind. Noun. காற்றுத்தடுப்பான். பெயர்ச் சொல் .
NMMS Q 69:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி என்னும் பகுதியில் உலகின் மிகப்பெரிய ___________ உள்ளது.
விடை : காற்றாலை நிலையம்
செப்டம்பர் 28
பகத் சிங் அவர்களின் பிறந்தநாள்
இன்றைய செய்திகள்
28.09.22
* ஃப்ரீ ஃபயரின் ரத்தம் தெறிக்கும் காட்சிகள், குழந்தைகளிடம் வன்முறையைத் தூண்டுகிறது: உயர் நீதிமன்றம் கருத்து.
* இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் வழித்தடங்களை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு: மேலாண் இயக்குநர் தகவல்.
* பொறியியல் படிப்புக்கான 2-ம் சுற்று கலந்தாய்வு: விருப்பப் பதிவுக்கான அவகாசம் நேற்றுடன் நிறைவு.
* தமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
* இந்திய நீதித்துறையில் ஒரு மைல்கல்: சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணை நேற்று முதல் நேரடி ஒளிபரப்பு.
* உள்நாட்டு தேவைக்கும், ஏற்றுமதிக்கும் தேஜாஸ் போர் விமானங்களின் உற்பத்தி அதிகரிப்பு - பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தகவல்.
* 36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் குஜராத்தில் நேற்று தொடங்கியது.
* டெல் அவிவ் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம் 2-ம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
* 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை: இந்திய அணி முதலிடத்தில் நீடிப்பு.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Comments
Post a Comment