SCHOOL MORNING PRAYER ACTIVITIES 22.09.2022
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.09.2022
திருக்குறள் :
பால்:இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: குறிப்பறிதல்
குறள் : 1097
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.
பொருள்:
பகையுணர்வு இல்லாத கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும், வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்
பழமொழி :
Good actions carry their warrant with them.
நல்லதை செய்பவர்கள் நல்லதையே பெறுவார்கள்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. மகிழ்ச்சி என்பது வேண்டும் வேண்டும் என்று கேட்பதில் இல்லை போதும் என்கிற மனதில் எனவே போதும் என்கிற நிறைவோடு வாழ முயற்சிப்பேன்.
2. பெற்றோர், ஆசிரியர் மற்றும் பிறரை சரியான முறையில் மகிழ்விப்பதும் மகிழ்ச்சியே. மகிழ்விப்பேன்.
பொன்மொழி :
நீ தனிமையில் இருக்கும் போது உனக்கு என்ன தோன்றுகிறதோ அது தான் வாழ்வை தீர்மானிக்கும்.
பொது அறிவு :
1.சக்தி தரும் வெப்பத்தின் அலகு என்ன ?
கலோரி.
2.ஆல்டிமீட்டர் எதை அளக்கிறது?
உயரத்தை.
NMMS Q 65:
Circle: Circumference :: Square : ? a) Angle b) Area c) Diagonal d) Perimeter
Answer : Perimeter
செப்டம்பர் 22
மைக்கேல் பரடே அவர்களின் பிறந்தநாள்
இன்றைய செய்திகள்
22.09.22
* 448 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகத்தை தமிழகத்தில் அமைத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
* தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* சட்டப்பேரவை கூட்டத் தொடரை அக்டோபரில் நடத்த திட்டம் - அலுவல் ஆய்வு கூட்டத்துக்கு பிறகு தேதி அறிவிக்கப்படும்.
* இங்கிலாந்தின் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் அக்.22-ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது.
Comments
Post a Comment